- Home
- Politics
- விஜயை வைத்து பூச்சாண்டி..! மு.க.ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்... கந்தலான கதர் சட்டைகளின் புளுகிணியாட்டம்.!
விஜயை வைத்து பூச்சாண்டி..! மு.க.ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்... கந்தலான கதர் சட்டைகளின் புளுகிணியாட்டம்.!
திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து போட்டியிட்ட அத்தனை தொகுதிகளையும் மீண்டும் பெறுவது, இல்லையென்றால் நாங்கள் ரூட்டை மாற்றிக் கொள்கிறோம். வேற பக்கம் போனாலும் நீங்க அதிர்ச்சி அடைய கூடாது’’ என ஷாக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் காங்கிரஸ் சீனியர்கள்

ஜெர்மனிக்கு செல்லும் முன், ‘‘புதிய வாக்காளர்களை கட்சிக்காக கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதுதான் உங்களுக்கு நான் கொடுத்திருக்கிற அசைன்மெண்ட்’’ என உடன்பிறப்புகளுக்கு உத்தரவு போட்டு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எங்கள் கட்சியின் புதிய வாக்காளர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
அதற்கு காரணம், திமுக கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு எழுந்துள்ளதாக கூறுகிறார்கள். ‘‘நாங்கள் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைப் பெற்று 18 எம்.எல்.ஏ.,க்களையும் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. இப்போது இந்தத் தேர்தலிலும் அதே தொகுதிகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால், திமுகவிலோ ஏன் இரண்டு முறை காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளை மறுபடியும் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்? அங்கெல்லாம் நாம கட்சி நடத்தனுமா? வேணாமா? அந்த தொகுதிகளில் கட்சிக்காக உழைத்த நாமெல்லாம் எப்போது அதிகாரத்துக்கு வருவது? அதனால் காங்கிரஸுக்கு மறுபடியும் அந்த தொகுதிகளை ஒதுக்கக் கூடாது’’ என பல்வேறு மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
காரைக்குடி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், ஊட்டி, தென்காசி, அறந்தாங்கி, நாங்குநேரி என பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. காங்கிரஸுக்கு மறுபடியும் அந்த தொகுதி கொடுக்கக்கூடாது, ‘‘நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு அந்தத் தொகுதிக்குள் கட்சியை வளர்த்து வைத்து இருக்கிறோம். இந்த தொகுதிகள் எல்லாம் காங்கிரஸுடைய கோட்டை. இப்போது வெற்றி அடைந்த 18 தொகுதிகளையும் நாங்கள் திமுகவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. எப்படியாவது அந்தத் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். விட்டுக்கொடுவிடக்கூடாது என திமுகவுக்கு எதிராக புதிதாக ஒரு புரட்சி படையை உருவாக்கி இருக்கிறார்கள் காங்கிரஸ் சீனியர்கள்.
திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து போட்டியிட்ட அத்தனை தொகுதிகளையும் மீண்டும் பெறுவது, இல்லையென்றால் நாங்கள் ரூட்டை மாற்றிக் கொள்கிறோம். வேற பக்கம் போனாலும் நீங்க அதிர்ச்சி அடைய கூடாது’’ என ஷாக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் காங்கிரஸ் சீனியர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய், ராகுல் காந்தியை சந்திக்க போகிறார் என்று சமீப காலமாக சில செய்திகள் வட்டம் அடித்து வருகிறது. தவெகவும், காங்கிரஸும் கூட்டணி சேரப் போகிறது என செய்திகளை கசிய விட்டதே இப்படிப்பட்ட காங்கிரஸ் சீனியர்கள்தான் என்கிறார்கள்.
திமுக கூட்டணி உடைந்து விட்டால் அது திமுகவுக்கு நெகட்டிவாக போயிடும். இதெல்லாம் காரணம் காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெறலாம். ஏற்கனவே வென்ற தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளலாம். சீனியர்களும் இதில் நல்ல லாபம் பார்க்கலாம். அதாவது எம்எல்ஏக்கள் ஆகலாம் எனக் கணக்குப் போட்டுத்தான் இப்படி பூச்சாண்டி காட்டி இருக்கிறார்கள். இந்தப் பக்கம் விஜயையும் நம்ப வைத்து வந்திருக்கிறார்கள்’’ என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர்.
ஆனால், இந்த கணக்கு எல்லாம் ராகுல் காந்தியிடம் எடுபடாது. அவரும் மு.க.ஸ்டாலினுடன் உயிரின் உயிராக, நட்போ நட்பாக, நெருக்கமாகப் பயணிக்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லை. பீகார் விகார் சம்பவமே அதற்கு சாட்சி என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமானவர்கள். அதை மனதில் வைத்துத் தான் திமுகவின் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதற்கான காரணம், கூட்டணியில் யார் இருந்தாலும், புதிதாக வந்தாலும், வராவிட்டாலும் நமது நோக்கம் அதிகளவிலான வாக்காளர்கள், புதிய வாக்காளர்களை கட்சிக்காக கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதுதான் உங்களுக்கு நான் கொடுத்திருக்கிற அசைன்மென்ட் என உடன்பிறப்புகளுக்கு உத்தரவு போட்டு ஜெர்மன் சென்று இருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.