MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாஜக அரசுக்குத்தான் சவுக்கடி..! கரூர் வழக்கில் திமுகவைவிட கதறும் காங்கிரஸ்..!

உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாஜக அரசுக்குத்தான் சவுக்கடி..! கரூர் வழக்கில் திமுகவைவிட கதறும் காங்கிரஸ்..!

சிபிஐ அமைப்பில் வேலை செய்வதற்கான ஆட்கள் கிடையாது. அதிகாரிகள் இல்லாமல் சிபிஐ தத்தளிக்கிறது. சிபிஐ பொறுத்தவரையில் தீர்வு காண முடியாத ஒரு அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுதான் சிபிஐயினுடைய பிரச்சினை.

2 Min read
Author : Thiraviya raj
Published : Oct 14 2025, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
உயர்நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா?
Image Credit : Asianet News

உயர்நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா?

கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு சவுக்கடி என எல்.முருகன் கூறியது குறித்த கருத்துக்கு ”உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு சவுக்கடி என்றால் உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா?” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘என்னைப் பொறுத்தவரையில் எந்த நீதிமன்றத்திற்கும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு சவுக்கடி என்று கூறினார் மத்திய அமைச்சர்கள் எல்,முருகன். அப்படியானால் உயர்நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா? உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் சென்றன. எஸ்ஐடி அமைத்து உச்சநீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் தவெகவின் அடிப்படை மனு. இன்னொரு அதிமுகவினுடைய மனுவாக இருக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
சிபிஐ நியாயத்தை கண்டுபிடித்து விடுமா?
Image Credit : ANI

சிபிஐ நியாயத்தை கண்டுபிடித்து விடுமா?

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சிபிஐ விசாரணை கோரி மனு செய்தனர். இது தவெகவின் மனு கிடையாது. ஆனாலும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எங்களை பொருத்தமட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், சிபிஐ நியாயத்தை கண்டுபிடித்து விடும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். உடனடியாக விசாரணை முடித்து விடுவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கு உதாரணம் நாம் கண்ணுக்கு எதிராக பார்க்கக்கூடிய ஒரு வழக்கு. திருப்புவனம் அஜித் குமார் படுகொலையை சிபிஐ என்ன செய்து வைத்திருக்கிறது?

33
அமித் ஷா தான் முடிவு செய்வார்
Image Credit : X

அமித் ஷா தான் முடிவு செய்வார்

சிபிஐ அமைப்பில் வேலை செய்வதற்கான ஆட்கள் கிடையாது. அதிகாரிகள் இல்லாமல் சிபிஐ தத்தளிக்கிறது. சிபிஐ பொறுத்தவரையில் தீர்வு காண முடியாத ஒரு அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுதான் சிபிஐயினுடைய பிரச்சினை. பிரதமருக்கு சிபிஐ ரிப்போர்ட் கொடுத்தாலும் அது அமித் ஷாவின் கையில் இருக்கிறது. உடனே தீர்வாகிவிடும், உடனே நியாயம் கிடைத்து விடும் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. இப்படியெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்போது அது வெறும் கண்துடைப்பு அமைப்பாக மாறிவிட்டது. அமித் ஷா கையில் சிபிஐ இருக்கிறது. சிபிஐ அமைப்பை அவர் எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்படி பயன்படுத்துவார். எல்.முருகன் சொல்வது போல் பயன்படுத்துவாரோ அல்லது அண்ணாமலை சொல்வது போல் பயன்படுத்துவாரோ, அதை அமித்ஷா அவர்கள் தான் முடிவு செய்வார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Recommended image2
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Recommended image3
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
ஆளுக்கு ஒரு புறம் சிதறி ஓடும் திமுகவினர்! ஆஹா என்ன ஒரு கண்கொள்ளக்காட்சி! வெறுப்பேற்றும் எச்.ராஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved