விஜய் மாநாட்டில் இவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.! வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவுள்ளது. 237 ஏக்கர் நிலத்தில் மாநாட்டு திடலும், 217 ஏக்கர் நிலத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமும் தயாராகி வருகிறது. மாநாட்டில் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21, 2025 அன்று மாலை 4 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது, ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
இதனையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது. தவெக மாநாடு முதலில் ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் காரணமாக காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக தேதிகள் மாற்ற அறிவுறுத்தப்பட்டது
அந்த வகையில் ஆகஸ்ட் 18 முதல் 22, 2025 வரையிலான தேதிகளில் ஒரு நாள் நடத்தும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது.மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் நநடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,
மேலும் 237 ஏக்கர் நிலத்தில் மாநாட்டு திடலும், 217 ஏக்கர் நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் மாநாடு ஏற்பாடு தொடர்பாக போலீஸ் தரப்பில் தவெகவிற்கு 42 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தவெக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாடு மாலை 3 15 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் எனவும், மாநாட்டில் முதலில் கொடியேற்றுதல் பின்னர் தமிழ் தாய் வாழ்த்து, உறுதிமொழி கொள்கை பாடல், தீர்மானம், அதன் பின் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
மாநாட்டில் ஆண்கள் 1,20,000 ஆயிரம் பேரும் பெண்கள் 25 ஆயிரம் முதியவர்கள் 4500 மாற்றுத்திறனாளிகள் 500 பேரும் கலந்து கொள்வார்கள் எனவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டில் கலந்து கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை மாநாட்டில் இருந்து உள்ளேயும் வெளியேவும் செல்வதற்காக 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்காக 100க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் 400 தற்காலிக கழிப்பறைகள்,
50க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள் மேலும் மாநாட்டில் 420 ஒலிபெருக்கிகள் 20,000 மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாகவும், 12 அவசர கால வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.