- Home
- விவசாயம்
- ராமதாஸ் -அன்புமணி ரெண்டு பேருமே நேரடியா என் அறைக்கு வரணும்... நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி
ராமதாஸ் -அன்புமணி ரெண்டு பேருமே நேரடியா என் அறைக்கு வரணும்... நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி
பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டங்களை அறிவித்த நிலையில், நீதிமன்றம் இருவரையும் இன்று ஆஜராகும்படி அறிவுறுத்தியுள்ளது.

திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் உள்ள கட்சி பாமக, பாமகவின் ஆதரவு இருந்தால் தான் வட மாவட்டங்களில் வெற்றி பெற முடியும். இந்த நிலையில் தான் தந்தை- மகன் இடையே உட்கட்சி மோதல் தீவிரம் அடைந்துள்ளதால் பாமக இரு பிரிவாக பிரிந்துள்ளது.
அதிகார மோதலால் பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தவித்து வருகிறார்கள். அன்புமணிக்கும்- ராமதாசுக்கும் இடையிலான மோதல் பாமகவின் பொதுக்குழுவில் மோதல் வெட்ட வெளிச்சமானது. ஒரு கட்டத்தில் பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி அதிரடியாக அறிவித்தார் ராமதாஸ்,
ஆனால் இதனை ஏற்க மறுத்த அன்புமணி பொதுக்குழுவால் தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லையென தெரிவித்தார். இதனையடுத்து பாமகவை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்ட் 17ஆம் தேதி பொமுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் போட்டி பொதுக்குழவிற்கு அழைப்பு விடுத்தார் அன்புமணி, அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து அன்புமணியின் அறிவித்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க ராமதாஸ் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இன்று விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இன்று காலை விசாரணை தொடங்கியதும்,
விசாரணை தற்போது வேண்டாம் என கூறிய நீதிபதி இன்று மாலை 5.30 மணிக்கு எனது அறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் ஆஜராகும் படி கூறினார். மேலும் இது உத்தரவு அல்ல, வலியுறுத்தல் என்று நீதிபதி தெரிவித்தார். பாமகவின் எதிர்காலம் யார் கையில் என்ற நிலை நீடித்து வந்த நிலையில் அன்புமணி மற்றும் ராமதாசை நீதிபதி தனது அறைக்கு வரும்படி அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.