- Home
- Politics
- புஸ்ஸி, ஆதவ் அத்தனை பேர் பதவியும் காலி..! தவெகவில் கூண்டோடு களைக்கும் விஜய்..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
புஸ்ஸி, ஆதவ் அத்தனை பேர் பதவியும் காலி..! தவெகவில் கூண்டோடு களைக்கும் விஜய்..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, சிடிஆர் நிர்மல்குமார் என முக்கிய பொறுப்பில் உள்ளவர்களது பதவிகளை அடியோடு கலைக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்’’ என்கிறார்கள்

விஜய் தலைமையிலான தவெக தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தாலும், கட்சியின் உள்மட்டத்தில் உள்ள நிர்வாகிகளின் செயல்பாடுகளால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
தலைமை நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களுக்குள் எழுந்த ஈகோ மோதல்களும் ஆடியோ மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. கட்சியின் அன்றாட நிர்வாகம், பதவி நியமனங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பது வந்த பொதுச்செயலாளர் கட்சியில் மாவட்ட, இலக்கிய நிர்வாகிகள் நியமனங்களின்போது "சாதி, பணம் பார்த்து பதவி வழங்குவதாக" குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர். பதவிகளை சாதி அடிப்படையில் குறிப்பாக தனது சாதியினருக்கு வழங்குவதாகவும், ரூ.15 லட்சம் வரை பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. "எங்களை நாய் மாதிரி நடத்துகிறார்" என நிர்வாகிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
புஸ்ஸி ஆனந்த் தன்னைத் தாண்டி கட்சி விவகாரங்களை விஜயிடம் கொண்டு செல்வது இல்லை என்றும் ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்கள் கட்சியை வலுப்படுத்த முயற்சிக்காமல் தங்களை முன்னிலைப்படுத்தவே முயன்றதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்தன. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு அவர்கள் மீதான விரக்தியை மேலும் தீவிரமாகி உள்ளது.
மிகப்பெரிய சவாலோ, நெருக்கடியோ வரும் நேரத்தில் கட்சி தலைமை இவ்வளவு பெரிய மௌனம் சாதிப்பது சரியா? என கேள்விக்கு எழுப்ப ஆரம்பித்து இருக்கிற விஜய் ரசிகர்கள், அவர்களது கோபத்தை விஜய்க்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி மீது திருப்பி இருக்கிறார்கள்.
கைதுக்கு பயந்து கொண்டு தலைமுறைவான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்றோர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தார்களே தவிர, தொண்டர்களை அடுத்து என்ன செய்ய வேண்டும்? கரூர் விவாகரத்தில் என்ன பதில் சொல்ல வேண்டும்? நிலைமையை எப்படி கையாள வேண்டும்? என எதையும் சொல்லத் தெரியாமல் ஏன் மறைந்து போனார்கள்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு பனையூர் வீட்டில் இருந்த விஜய், ஆதவ், புஸ்ஸி, ஜான், நிர்மல் என யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு சென்றார். அவரால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக்கூட யோசிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. ஆலோசனை செய்யக்கூட ஆளில்லையே என ஸ்தம்பித்துப்போனார் விஜய். அப்போதுதான் வெகுநாட்கள் தொடர்பில் இல்லாமல் போன விஜய் குடும்பத்து கணக்குவழக்குகளை பார்க்கும் வெங்கட்ராமனை மீண்டும் அழைத்துப்பேசினார் விஜய். அருண்ராஜ் விஜயைன் நம்பரை பார்த்து தெம்பூட்டி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களை வீடியோ காலில் பேச வைத்தார். இடையில் எஸ்.ஏ. சந்திரசேகரின் அறிவுரைகளும் விஜய்க்கு கிடைத்தது.
கரூரை சுற்றியுள்ள 20 மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் விஜய். இப்போதுதான் புஸ்ஸி, ஆதவ், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டவர்களை தாண்டி என்ன நடக்கிறது என சில விஷயங்களை யூகிக்கத் தொடங்கியுள்ளார் விஜய். பல விஷயங்கள் தனக்கு தெரியவராமல் தடுத்து இருப்பதையும் உணர்ந்துள்ளார் விஜய்.
பொம்பள மாதிரி வீட்டுக்குள்ளேயே இருக்கவாடா பொதுசெயலாளர் பதவி வாங்குன. pic.twitter.com/QSaLPIkg4g
— Mᴏʀᴘʜɪɴᴇ (@OGarun21) October 23, 2025
இதுவரை தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து கொண்ட விஜய் இப்போது உட்கட்சி பதவிகளை அடியோடு கலைக்கும் முடிவுக்கு வந்துள்ளார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, சிடிஆர் நிர்மல்குமார் என முக்கிய பொறுப்பில் உள்ளவர்களது பதவிகளை அடியோடு கலைக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்’’ என்கிறார்கள் தவெக முக்கிய நிர்வாகிகள்.