- Home
- Politics
- நைனார் வீட்டை பார்த்து ஆடிப் போன அமித்ஷா..! ரூ.1500 கோடி சொத்துக்கள்? பண்ணையாரின் மறுபக்கம்..!
நைனார் வீட்டை பார்த்து ஆடிப் போன அமித்ஷா..! ரூ.1500 கோடி சொத்துக்கள்? பண்ணையாரின் மறுபக்கம்..!
ஜெயலலிதா, திருநெல்வேலியில் மாநாடு நடத்த இடம் தேடிக் கொண்டு இருந்தபோது 100 ஏக்கர் நிலத்தை சொந்தமாகவே வாங்கியவர் நயினார் நாகேந்திரன். தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தொழில்களில் வரும் வருமானத்தை பாதுகாக்கவே அரசியலில் ஈடுபட்டு வருபவர்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக பாஜக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரம்மாண்ட வீட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. பூத் கமிட்டி மாநாடு நடந்த இடம் நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதிக்கு உட்பட்டது. இதனால், அமித்ஷாவை தனது வீட்டிற்கு அழைத்து நயினார் நாகேந்திரன் தேநீர் விருந்து கொடுத்தார். அப்போது, ஸ்டார் ஹோட்டல் லுக்கில் பிரம்மாண்டமாக இருந்த நயினார் நாகேந்திரனின் வீட்டைப்பார்த்து பிரமித்துப் போயுள்ளார் மத்திய அமைச்சர் அமித் ஷா.
திருநெல்வேலி, பெருமாள்புரம், 540/1A1B, செயிண்ட் தாமஸ் தெருவில் உள்ள நயினார் நாகேந்திரனின் வீடு நவீன கட்டமைப்போடு 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டப்பட்ட மிகப்பிரம்மாண்ட வீடு. இந்த வீட்டில்தான் சில மாதங்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 100 வகை பதார்த்தங்களுடன் தடபுடலாக விருந்து வைத்தார் நயினார் நாகேந்திரன்.
திருநெல்வேலி அருகே உள்ள தண்டையார் குளம் கிராமம்தான் நயினார் நாகேந்திரனின் பூர்வீகம். அவரது தந்தை நயினார் தேவர் பெரும் நிலக்கிழார். அப்போது வாரச் சந்தைகளை குத்தகைக்கு எடுத்து நடத்துவது, பெர்மிட் இருந்தபோது சாராயக்கடைகளை எடுத்து நடத்துவது, சாராயக்கடைகளில் பார் நடத்தியது, கிளப் நடத்தியது, நிலங்களை வாங்கி விவசாயம் செய்வது, அதை பிறருக்கு கைமாற்றி விடுவது என மிக வசதியான பண்ணையார் குடும்பம்.
நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான திருநெல்வேலி பகுதிகளில், அவரது பெயரைச் சொல்லி யாரும் கூப்பிட மாட்டார்கள். பண்ணையார் என்றுதான் அன்பாக அழைப்பார்கள். நயினார் நாகேந்திரன் குடும்பம் அவ்வளவு செல்வச் செழிப்பான குடும்பம். திருநெல்வேலியில் பெரியளவில் பால்பண்ணையை நடத்தி வந்ததாலும் நயினார் நாகேந்திரனை பண்ணையார் என அழைக்க ஆர்மபித்தனர். அப்போது முதல் அவரை பண்ணையார் என்றே அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர். ஜெயலலிதா, திருநெல்வேலியில் மாநாடு நடத்த இடம் தேடிக் கொண்டு இருந்தபோது 100 ஏக்கர் நிலத்தை சொந்தமாகவே வாங்கி ஜெயலலிதாவையே திகைக்க வைத்தவர் நயினார் நாகேந்திரன். தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தொழில்களில் வரும் வருமானத்தை பாதுகாக்கவே அரசியலில் வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்.
1990- 96 வரை அமைச்சராக இருந்த நயினார் அப்போது சேர்த்த சொத்துக்கள், பணத்தை வைத்து தற்போது 30 வருடத்தில் பல நூறு கோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டார். இவர் திருநெல்வேலி பகுதியில் ஹோட்டல், லாட்ஜுகள், கேரளாவில் ரிசார்ட், விவசாய நிலங்கள், வாடகை வருமானம் என வருமானத்தை குவித்து வருகிறார். கடந்த 10 வருடத்திற்கு மேலாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் கொடிகட்டி பறக்கிறார். நயினாரின் திருநெல்வேலி வீடு மட்டுமல்ல, சென்னை, ஈசிஆர் பகுதியிலுள்ள வீடும் மிகப்பிரமாண்டமாக, திருமண மண்டபம் போல இருக்கும். எக்மோரில் இருக்கும் ப்ளூ டையமண்ட் ஹோட்டலும் அவருடையதே..
2006 2011 கால கட்டத்தில் திமுக ஆட்சி நடைபெற்றாலும் நயினார் நாகேந்திரனின் தொழில்கள் அபார வளர்ச்சி பெற்றது. அரசு போக்குவரத்து துறை நிலங்களை தொடர்ச்சியாக குத்தகைக்கு எடுத்தார். அரசுக்கு சொந்தமான ஹோட்டல்களை லீசுக்கு எடுத்தார். உள்ளூர் திமுக அமைச்சருடன் கைகோர்த்து தனது தொழில்களை பலமடங்கு பெருக்கினார். ஆந்திராவில் கடப்பா சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல கிராணைட் குவாரிகளும் இவருக்கு சொந்தமாக உள்ளது.
ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சாரத்துறை, தொழில்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, முக்கிய பேருந்து நிலையங்களின் அருகில் உள்ள ஹோட்டல்கள் இவருக்கு சொந்தமானதாக இருக்கும் அல்லது அதில் பங்குதாரராக இருந்தார் நயினார் நாகேந்திரன். அரசு நிலங்களை 49 வருடம், 60 வருடம், 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து அதிலும் வருமானத்தை பெருக்கினார்.
2021 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது தனது வேட்புமனுவில் குறைத்து காட்டியுள்ளதாகவும், ரூ.1,500 கோடி சொத்துகளை நயினார் நாகேந்திரன் மறைத்து காட்டியதாகவும் புகார் எழுந்தது. தற்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான சொத்துக்களை வாங்கி, சரி செய்து விற்கக்கூடிய முக்கியப்புள்ளியாக இருக்கிறார் அவரது மகன் நயினார் பாலாஜி.
சில மாதங்களுக்கு முன் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்ததாக நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மோசடிப் புகார் எழுந்து அதிர்ச்சியைக் கிளப்பியது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான வில்லங்க சொத்துக்களை வாங்கி சரி செய்து, விற்கக்கூடிய முக்கியப்புள்ளியாக இருக்கிறார் அவரது மகன் நயினார் பாலாஜி.