திமுகவை ஓங்கி அடிச்சவரு... பாஜகவை ஓரமா கடிச்சவரு..! விஜயின் ரூட்டைக் கணித்த கஸ்தூரி..!
திமுக விஜய்யை முன்னிறுத்தி அதிமுகவின் வலிமையையும் உண்மையான முகத்தையும் மறைக்க முயல்கிறது. இது திமுகவின் "வியாபார தந்திரம்" என்று அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது விஜய் பேசிய கருத்துகள் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
விஜய் தனது உரையில், ‘‘எம்ஜிஆர், விஜயகாந்தை புகழ்ந்து, மதுரை மண்ணின் உணர்வு, அவர்களின் மக்கள் பணியை நினைவுகூர்ந்தார். பாஜகவுடன் மறைமுக கூட்டணி குறித்த விமர்சனங்களை மறுத்து, "நாம் ஊழல் கட்சியா?" என கேள்வி எழுப்பினார். திமுகவின் பொய் வாக்குறுதிகளையும், நீட் தேர்வு தொடர்பான மோடியின் பிடிவாதத்தையும் விமர்சித்தார்.
234 தொகுதிகளிலும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்துவோம் என்று அறிவித்தார். "தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம்; உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்திருக்கிறேன்" என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
விஜய், அ.தி.மு.க மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தார். இது அவரது தனித்து போட்டியிடும் முடிவை வலுப்படுத்தியது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி விஜயின் பேச்சுகுறித்து,‘தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘அப்பாவுக்கு வெச்சாரு பாரு பெரிய ஆப்பா! இனிமே ஸ்டாலின் அங்கிள் ஒர்ஸ்ட் அங்கிள் கோஷம்தான்! திமுகவை ஓங்கி அடிச்சவரு, பாஜகவை ஓரமா கடிச்சவரு, எம்ஜிஆர் பாட்ட பாடி செய்வீர்களா செய்வீர்களா என்கிறார். பாஜகவை விட்டு எங்க பக்கம் வாங்கன்னு அதிமுகவுக்கு ஓபன் அழைப்பு வச்சுருக்காரு வேற...’’ எனத் தெவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த கஸ்தூரி, விஜயின் அரசியல் பிரவேசம் குறித் தொடர்ந்து கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.
திமுக விஜய்யை முன்னிறுத்தி அதிமுகவின் வலிமையையும் உண்மையான முகத்தையும் மறைக்க முயல்கிறது. இது திமுகவின் "வியாபார தந்திரம்" என்று அவர் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க விஜய், எடப்பாடி பழனிசாமி, மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் என்று கஸ்தூரி கூறியிருந்தார். "விஜய் கூறியபடி திமுக தோல்வியடைந்தால், அவரது வாய்க்கு நானே சர்க்கரை போடுவேன்" என்று விளையாட்டாக கூறி, விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.