ஓடாத வண்டி..! திமுகவுக்கு தாவும் 20 முக்கியப்புள்ளிகள்..! கபலீகரமாகும் அதிமுக..!
அதிமுகவில் கடுமையான அதிருப்தியில் இருக்கக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் இந்த கட்சி தேராது என 20 பேர் என நினைத்து வேறு கட்சிக்கு தாக்குவதற்கான ஒரு பேச்சு வார்த்தையில் இருக்கிறார்கள். அவர்களது பட்டியல் விரைவில் வெளியாகும்.

அன்வர் ராஜா, மைத்ரேயனைத் தொடர்ந்து முக்கியப் பிரமுகர்களை வளைக்கும் பணியில் மும்மரமாக இறங்கி இருக்கிறது திமுக என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக, அதிமுகவை கபிலீகரம் செய்யப்போவதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களே பேசி வருகிறார்கள்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ் கூறுகையில், ‘‘அதிமுக என்கிற அரசியல் கட்சி ஒரு ஓடாத குதிரை போல நின்று விட்டது. பஸ் ஸ்டாண்டில் நிறைய பஸ் இருக்கும். ஒரே போர்டு போட்ட பஸ் இரண்டு நிற்கும். திடீரென்று டிரைவர் ஒரு வண்டியை ஸ்டார்ட் செய்தால் முன்னாள் இருக்கும் வண்டியில் கஷ்டப்பட்டு இடம் பிடித்தவன் எல்லாம் இன்னொரு வண்டியை நோக்கி ஏறி விடுவார்கள். சாதாரண பயணிகள்கூட ஓடுகிற வண்டியில்தான் பயணிக்க நினைப்பார்கள். அரசியலில் ஓடாத வண்டியில் எப்படி பயணிப்பான்?
அதிமுக இனி கரையேறாது. தென் மாவட்டங்களில் அதன் வாக்கு சதவீதம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. அதிமுக மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்றால் அது வலிமை பெற வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்று கூட வேண்டும். அதற்கு பதிலாக பாஜகவுடன் ஒரு பொருந்தாத கூட்டணியை வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘‘நான் மோடியைவிட வலிமைமிக்க தலைவர் ஜெயலலிதா கடந்த காலங்களில் சொன்னவர் ஜெயலலிதா. சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையில் வைத்தார். மிகப்பெரிய வாஜ்பாய் அரசாங்கத்தையே கவிழ்க்கக்கூடிய ஆற்றல் உடையவராக ஜெயலலிதா இருந்தார். அப்படிப்பட்ட போயஸ் கார்டனில் எல்லோரும் காத்துக் கிடந்தது போய், அதிமுகவின் முதலமைச்சர் யார் என்று கேட்டால் மேலிடம் முடிவு செய்யும் என்கிறார்கள்.
அண்ணா திமுகவுக்கு தலைவர் அதிமுக-வா? அமித் ஷா திமுக-வா? ஏடிஎம்கே- வா? இது மோடி எம்கே- வா? என்ற ஒரு கேள்வி வருகிறது. அதனால்தான் இன்றைக்கு அதிமுக டைட்டானிக் கப்பல் போல மூழ்கத் தொடங்கிவிட்டது. இதில் பயணித்தோம் என்றால் தரையில் போய் மூழ்க வேண்டியதுதான். ஒன்றுமில்லாமல் போக வேண்டியதுதான். எனவே இந்த கட்சி வெற்றி பெறாது. இதற்கு எதிர்காலம் இல்லை. எனவே அதிமுகவை இனி தேறாது என்கிற காரணத்தினால்தான் இந்த கட்சி ஒன்றும் இல்லை என்ற காரணத்தினால் பலரும் வெளியேற இருக்கிறார்கள்.
அன்வர் ராஜா போனதெல்லாம் ஆச்சரியம் இல்லை. மைத்ரேயன் கட்சியை விட்டுப் போய்விட்டார். அதிமுக இனி, தமிழ்நாட்டை ஒருநாளும் ஆள முடியாது. வேர் பதிக்க முடியாது என்ற நிலைமை இருக்கிறது. அதிமுக- பாஜக என்பது ஒரு பொருந்தா கூட்டணி. இந்த பொருந்தா கூட்டணிக்குள் இருந்து கொண்டு மக்களுடைய பிரச்சினைகளை அவர்களால் பேச முடியவில்லை.
புதுக்கோட்டையினுடைய மன்னர் பாரம்பரியத்தை சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் என்பவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சுந்தரா டிராவல்ஸை எடுத்துக் கொண்டு சுற்றுப்பயணம் சென்று வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது சுற்றுப் பயணத்தில் புதுக்கோட்டைக்கு வருகிறபோது வரவேற்பு கொடுத்தார் கார்த்திக் தொண்டைமான். அடுத்த இரண்டு நாட்கலில் திமுகவில் போய் சேர்ந்து விட்டார். மன்னர் பரம்பரையாக இருந்தாலும் சரி, மைத்திரனையாக இருந்தாலும் சரி, அதிமுகவினுடைய அடித்தளத்தில் வேலை செய்த அன்வர் ராஜாவாக இருந்தாலும் சரி, அத்தனை பேருமே இந்தக் குதிரை ஓடாது என்று தெரிந்து கொண்டார்கள்.
எடப்பாடியின் முழுநேர கவனம் கட்சியை காப்பாற்றுவதற்கான முயற்சியில்தான் இருக்கிறதே தவிர, தான் பொதுச் செயலாளராக நீடிக்க வேண்டும். தனக்கு இரட்டை இலை சின்னம் மாறிவிடக்கூடாது. ஊழல் வழக்குகளிலே இரண்டாம் கட்ட தலைவர்களான வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் சிறைக்குப் போய் விடக்கூடாது என்றுதான் கட்சி நடத்துகிறார்களே தவிர, மக்கள் பிரச்சனையில் தலையிட்டு எதிர்க்கட்சித் தலைவர் போராட்டங்களை நடத்தினார் என்ற நிலைமை இருக்கிறதா?
கடந்த தேர்தல்களில் தோற்றுப் போனதற்கு பின்பு எல்லோரும் ஒன்று கூடினால்தான் வலிமை பெற முடியும் என்ற இடத்தை நோக்கி நகர்கிறார்களா ? இல்லை, இப்படித்தான் நடத்துவேன் என்று அவர்கள் நினைக்கிறார்களா ? பிடிவாதத்தோடு இருப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது. தோல்வியை தெரிந்து கொண்ட பின்பு அண்ணா திமுகவில் இருக்கக்கூடிய தொண்டர்கள் வேறு கட்சியை நோக்கி நகர்வார்கள். இப்போது அதை தொடங்க ஆரம்பித்து விட்டார்கள். தலைவர்கள் மட்டும் போனதைத்தான் நாம் அறிக்கையில் பார்க்க முடியும். தொண்டர்கள் கலைந்து செல்வது மேகம் கலைந்து செல்வது நமக்கு தெரியாது. கலைந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருக்கிற போது அதிமுகவின் வலிமை குறைந்து விடும். அந்த இடத்தை தமிழக வெற்றி கழகம் போன்ற கட்சிகள் நிரப்புவதற்கான சாத்தியம் இருக்கிறது. தவெக, அதிமுகவின் இடத்தை கைப்பற்றுவதற்கான சாத்தியம் இருக்கிறது.
அதிமுகவிலிருந்து 20 க்கும் மேற்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் வெளியேறுவதற்கான சாத்தியம் இருக்கிறது என நம்பகத்தனமான வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவில் கடுமையான அதிருப்தியில் இருக்கக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் இந்த கட்சி தேராது என 20 பேர் என நினைத்து வேறு கட்சிக்கு தாக்குவதற்கான ஒரு பேச்சு வார்த்தையில் இருக்கிறார்கள். அவர்களது பட்டியல் விரைவில் வெளியாகும். தங்கமணி ஏற்கெனவே அந்த நிலையில் இருப்பதாக தகவல். செல்லூர் ராஜு பெயரும் அடிபட்டது, இன்னும் பலபேர் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். அது அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுகவிலிருந்து திமுகவில் இணைப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது. இதேபோக்கை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டால் எடப்பாடி பழனிச்சாமி தவிர எல்லோருமே வேறு கட்சிக்கு தாவி விடுவார்கள்’’ என்கிறார் அவர்.