Malavika Mohanan: இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இதையடுத்து, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில், கவனிக்கப்படும் கதாநாயகியாக இருக்கிறார்.
சல்மான் கானுடன் ஜோடியா மாளவிகா ..?

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்திருந்தார். இருப்பினும், ஓடிடியில் வெளியான மாறன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, குட்டை டவுசர், பிகினி உள்ளிட்ட உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

மேலும், தற்போது பட வாய்ப்புகள் தென் இந்திய சினிமாவில்குறைய துவங்கியதால், பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன், முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மாளவிகா நெத்தியடி பதில்:

பொதுவாக, இணையத்தில் ஒரு விஷயம் லீக் ஆனாலே அந்த தகவல் காட்டு தீ போல் பரவுவது உண்டு. அப்படியாக, சமீபத்தில் சல்மான் கானுடன் மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கிறார் என்பது போல் தகவல் சமூக வலைத்தளத்தில் உலா வந்தது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள நடிகை மாளவிகா, இது முற்றிலும் பொய்யான தகவல், நான் சல்மான் கானுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்று உறுதி செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் 56 வயது நடிகருக்கு மாளவிகா, ஜோடியாக நடிக்கவில்லையா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்
