MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உலக சிட்டுக்குருவி தினம் இன்று..! கீச்...கீச்.. சிட்டுக்குருவிகளை நம் வீட்டிற்கு எப்படி கொண்டு வர வேண்டும்?

உலக சிட்டுக்குருவி தினம் இன்று..! கீச்...கீச்.. சிட்டுக்குருவிகளை நம் வீட்டிற்கு எப்படி கொண்டு வர வேண்டும்?

World sparrow day: உலக சிட்டுக்குருவி தினமான இன்று அவற்றை நம் வீட்டுக்கு வர வைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Mar 20 2023, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம் நாட்டில் இருக்கும் ஆயிரத்து 314 வகை பறவையினங்களில், 34 பறவையினங்கள் தான் உலகம் முழுக்க இருக்கின்றன. அதில் சிட்டுக்குருவியும் குறிப்பிடத்தக்க பறவை. அழிந்து கொண்டே வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 20-ஆம் தேதி அன்று உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கூட பின்பற்றப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வீட்டிற்குள் காற்று கூட வர முடியாதபடி குடியிருப்புகளை கட்டுகிறோம். முந்தைய காலங்களில் வீட்டு பரண், ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களில், தாழ்வாரங்களில் கூடு கட்டி சிட்டுக்குருவிகள் வசிக்கும். ஆனால் இப்போது நகரங்களை பொறுத்தவரை எல்லாமே அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான். கிராமங்களிலும் ஒரு சில வீடுகளை தவிர மற்ற வீடுகளுக்குள் சிட்டுக்குருவிகள் உள்ளே போகவே முடியாது. நகரமயமானதால் விளைவு.. எரிவாயுவில் வெளியேறும் மீதைல் நைட்ரேட் என்ற வேதியியல் கழிவுப் புகை காற்றை மாசுபட செய்தது. இதனால் குருவிகளின் இரைகளான பூச்சி இனங்கள் அழிந்துபோயின. நகரத்தில் வாழ்ந்த பல சிட்டுக்குருவிகள் உணவுப் பற்றாக்குறையால் அழிந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

35

முன்பை போல தோட்டங்கள், புதர்ச்செடிகள் இப்போது இல்லை. அதனால் சின்னஞ்சிறிய பறவைகள் கூடு கட்ட ஏற்ற இடங்களே இல்லாமல் போய்விட்டது. அதிலும் முட்டை பொரிக்கும் காலத்தில் இரையின்றி (புழு, பூச்சி) தன் குஞ்சுகளுக்கு சரியாக உணவு கொடுக்க முடியாமல் சிட்டுக்குருவிகள் அழிந்து போனதாக சொல்லப்படுகிறது. இப்போது ஆங்காங்கே திரியும் ஒரு சில சிட்டுக்குருவிகளை நாம் பேணி பாதுகாத்தால் கூட வருங்காலத்தில் கொஞ்சம் சிட்டுக்குருவிகளையாவது அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல முடியும். 

இதையும் படிங்க: காலி சிலிண்டரை மாத்துறப்ப இது மட்டும் நடந்தா அவ்வளவுதான்.. எப்படி கவனமா இருக்கணும் தெரியுமா?

45

சிட்டுக்குருவிகளை கவனிப்பது எப்படி?

முதலில் உங்களுடைய வீட்டுக்கு பக்கமாக சிட்டுக்குருவிகள் இருக்கிறதா? வீட்டுக்கு வருகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். அப்படி வந்தால் அவற்றிற்கு உணவாக தானியங்கள் வையுங்கள். அவை வந்து செல்லும் இடத்திற்கு அருகே சின்ன பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம். இந்த தண்ணீர் கொசுக்களுக்கு பரவல் இடமாக மாறக் கூடாது. அதனால் சுத்தமான நீரை அவ்வப்போது மாற்றி வைப்பதை மறக்காதீர்கள். தண்ணீர், உணவு மடுமில்லாமல் ஒரு அட்டைப்பெட்டியில் குருவி உள்ளே நுழையும் அளவில் ஓட்டை போட்டு உயரத்தில் தொங்க விடுங்கள். நிச்சயம் குருவிகள் வந்து அங்கே தங்கும். 

55

நம்பிக்கை...! 

நம் வீட்டில் சிட்டுக்குருவி கூடுகட்டினால், குடும்பமே வாழையடி வாழையாக தழைக்கும் என்ற அசாத்திய நம்பிக்கை உள்ளது. கிராம மக்களின் இந்த நம்பிக்கை கொஞ்சம் வினோதமாக இருந்தாலும், உயிரை வாழ வைப்பவர்கள் வாழ்வார்தானே! 

இதையும் படிங்க: kidney: ஆயுளுக்கும் சிறுநீரக பிரச்சினை வராது.. இந்த 4 விஷயங்களை செய்தால்.. உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கும்..!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
உலக சிட்டுக்குருவி தினம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Skipping Dinner: இரவு உணவு சாப்பிடாமல் தூங்குவது நல்லதா, கெட்டதா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி விபரம்!
Recommended image2
ஆண்களுக்கான 5 ட்ரெண்டிங் வெள்ளி பிரேஸ்லெட் ஸ்டைலான டிசைன்கள்!
Recommended image3
பரிசளிக்க ஏற்ற 5 அழகான மற்றும் நவீன சிறிய வெள்ளி கம்மல் டிசைன்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved