- Home
- Lifestyle
- World Lung Cancer Day 2025 : புற்றுநோய்க்கு சிகரெட் மட்டும் தான் காரணமா? நுரையீரல் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்!!
World Lung Cancer Day 2025 : புற்றுநோய்க்கு சிகரெட் மட்டும் தான் காரணமா? நுரையீரல் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்!!
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் இன்று (ஆகஸ்ட் 1) அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, நுரையீரல் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைளையும், உண்மைகளையும் தெரிந்துகொள்ளலாம்.

World Lung Cancer Day 2025
புற்றுநோய் உயிரைப் பறிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகும். ஆனாலும் ஆரம்பக் காலக்கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் வாழ்நாட்களை நீட்டிக்க முடியும். இந்தப் பதிவில் நுரையீரல் புற்றுநோய் குறித்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல விஷயங்களை தெளிவாக காணலாம்.
சிகரெட்டால் மட்டும் தான் புற்றுநோய் வருகிறதா? எனக் கேட்டால், இல்லை என்பதே பதில். புகைப்பிடிப்பவர்கள், முதியவர்கள் என பாரபட்சமின்றி யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். தவறான புரிதல் நோயின் அறிகுறிகளைக் கொண்டு அதை அறிவதை தாமதப்படுத்தலாம்.
சிகரெட் மட்டும் காரணமல்ல!
நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குவதில் புகையிலை முக்கிய காரணமாக இருந்தாலும் கூட, அதைத் தவிர காற்று மாசுபாடு, இரண்டாம் நிலை புகை, ஆஸ்பெஸ்டாஸ், ரேடான் ஆகிய விஷ வாயுக்களின் தாக்கம் ஆகியவையும் நுரையீரல் புற்றுநோய் வரக் காரணமாகும்.
இ-சிகரெட்ஸ் பாதிப்பைத் தராதா?
எந்த வகை சிகரெட் என்றாலும் அவை நல்ல பாதிப்பைத் தருவதில்லை. ஒன்றை விட மற்றொரு வகை சிகரெட் குறைந்த அல்லது அதிக தாக்கம் கொண்டது என வாதாடுவது பயனல்ல. இதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. இ-சிகெரெட்ஸ், சிகார்ஸ் என எல்லா ம் வகையான புகையிலையும் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்தை ஏற்படுத்தம் கூடியவை.
இளைஞர்களுக்கு புற்றுநோய் வராதா?
நுரையீரல் புற்றுநோய் எல்லா வயதினருக்கும் வரும். ஆண், பெண், வயது வேறுபாடின்றி குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் வரலாம். தரவுகளின்படி, நுரையீரல் புற்றுநோயின் வரும் வாய்ப்பு ஆண்கள், 65 வயதைக் கடந்தவர்களுக்கு அதிகம் உள்ளது. மரபணு காரணிகள், சுற்றுச்சூழலும் இளைஞர்களிடையே ஆபத்தை அதிகரிக்கும்.