- Home
- Lifestyle
- World liver day 2022: இன்று உலக கல்லீரல் அழற்சி தினம்...கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை..செய்ய கூடாதவை..
World liver day 2022: இன்று உலக கல்லீரல் அழற்சி தினம்...கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை..செய்ய கூடாதவை..
World liver day 2022: ஆண்டுதோறும் ஜூலை 28ம் தேதி உலகக் கல்லீரல் அழற்சி நாள் ஆக கடைபிடிக்கப்படுகிறது. கல்லீரன் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

World liver day 2022:
இதயம், மூளையை போலவே கல்லீரலும் மிக முக்கிய உள்ளுறுப்பாகும். ஆனால், இதயம் மூளை ஆகிய உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கல்லீரலுக்கு கொடுப்பதில்லை. இது மனிதர்களில் அடிவயிற்றின் வலது மேல் பகுதியில், உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது. கல்லீரலின் செயல்பாடு பல்வேறு வளர்சிதை மாற்றங்களை நச்சுத்தன்மையாக்குவது, புரதங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செரிமானம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான உயிர்வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதாகும்.
World liver day 2022:
என்ன காரணம்..?
மது அருந்துவது, அளவுக்கதிகமாக மருந்துகளை உட்கொள்வது, மோசமான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் கல்லீரல் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, இதுபற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.
World liver day 2022:
கல்லீரல் நோயின் அறிகுறிகள்:
கல்லீரலை சரியாக கவனித்து கொள்ளாவிட்டால் உடலின் பல இயக்கங்கள் பாதிக்கப்படும். இந்த உறுப்பில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுதல், மஞ்சள் காமாலை, மூட்டுவலி, மன அழுத்தம், காய்ச்சல் , வயிற்று வலி, குமட்டல், வாந்தி, மயக்கம், எடை குறைவு, கணுக்கால் வீக்கம், உள்ளிட்ட பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
World liver day 2022:
கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை:
1. மது மற்றும் சிகெரெட் பழக்கத்தை குறைத்து அல்லது அறவே தவிர்த்து நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். சரியான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
2. நீர்ச்சத்து கொண்ட வெள்ளரி, , புதினா, கொத்தமல்லி ,பீர்க்கை, பீட்ரூட், சுரைக்காய் போன்ற காய்களை உணவில் சேர்த்து கொள்வது கல்லீரலை சிறப்பாக பாதுகாக்கும்.
World liver day 2022:
3. வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் வலுவடையும் மற்றும் அதன் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.
4. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு, கல்லீரலை பாதிக்கும், குறிப்பாக மிட்டாய்கள், குக்கீகள் மற்றும் சோடாக்களில் காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கல்லீரலை சேதப்படுத்தும்.
5. சிவப்பு இறைச்சி உங்கள் கல்லீரலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் .ஏனெனில், சிவப்பு இரைச்சிகளை ஜீரணிக்க கல்லீரல் மிகவும் கஷ்டப்படும்.
World liver day 2022:
6. அதேபோன்று, பர்கர், பிரெஞ்ச் ஃப்ரைஸ், சிப்ஸ், பீட்சா, பாஸ்தா போன்ற மேற்கத்திய துரித உணவுகளை உண்ணாமல் இருப்பது கல்லீரலுக்கு நல்லது. ஏனெனில், இந்த உணவுகள் செரிமாணம் செய்ய கல்லீரல் மிகவும் கஷ்டப்படும். எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.
7. ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் முன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. வாரம் இரண்டு முறை உணவில் ப்ராக்கோலி சேர்த்து வருவது கல்லீரலுக்கு மிகவும் நல்லது.