Mattu Pongal Rangoli Designs: மாட்டு பொங்கலில் வாசல் அழகாக இந்த கோலத்தை போடுங்க!
Mattu Pongal Rangoli Designs: மாட்டு பொங்கலில் வாசலை அழகாக மாற்றும் ரங்கோலி கோலங்களை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே விழாக்காலங்களில் வீட்டை அழகுபடுத்துவதில் மெனக்கெடுவோம். அதிலும் பொங்கலில் வீட்டில் தோரணங்கள் கட்டுவது, சுவர்களில் வண்ணங்கள் பூசுவது என அலங்கார விஷயங்களில் அசத்தி விடுவோம். வீட்டிற்குள் அலங்காரம் செய்தாலும், வாசலில் கோலமிட்டால் தான் பொங்கல் முழுமை பெறும். ஏற்கனவே நமது தளத்தில் தைப்பொங்கலில் போட வேண்டிய கோலங்கள் வெளியாகியுள்ளது. இங்கு மாட்டு பொங்கலில் போடக் கூடிய ரங்கோலி கோலங்களை காணலாம்.
பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான சூரிய பொங்கலில், பொங்கல் பானை கரும்பு என கோலங்களை அசத்தியிருப்போம். ஆனால் மாட்டு பொங்கல் தான் சிக்கலான விஷயம். சில மாட்டை வரைகிறேன் என அமர்களம் பண்ணிவிடுவார்கள். மாட்டை வரைவதில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரங்கோலி கோலங்களை போடுங்க மக்களே!
கோடு போட்ட மாதிரி வாழ்கிற வாழ்க்கை என்ற பதமே கோலமிடும் எவரோ தான் சொல்லியிருக்க வேண்டும். கோலத்தில் கோடுகளும், புள்ளி மாதிரி மனிதனுக்கு ஒழுக்கம். பானையில் பொங்கல் பொங்கி வருவது போல வாழ்விலும் செழுமை பொங்க வேண்டும் என வேண்டி கொண்டு கோலமிடுங்கள்.
இதையும் படிங்க; Facts about Jallikattu: சிந்து சமவெளி நாகரிகத்தை முந்திய ஜல்லிக்கட்டு! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்
மனிதர்களின் வாழ்வியலில் பசுவிற்கு தொடர்பு உண்டு. அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் மாட்டு பொங்கலை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். பசு எல்லா தேவர்களுடனும் இருக்கும் விலங்கு என்பதாலும் வணங்கப்படுகிறது.
பொங்கல் அன்று மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். அன்று குழந்தைகள் வண்ணமிட பெற்றோர் கோலமிடுவர். கூட்டு குடும்பங்களில் கோலமிடும்போது கொண்டாட்டம்தான். குடும்பமாக கோலமிடுவதால் அவர்களுக்குள் பிணைப்பு அதிகமாகும். ஆகவே குடும்பமாக கோலமிட்டு மாட்டு பொங்கலை கொண்டாடுங்கள்.
இதையும் படிங்க; Pongal rangoli designs 2023: பொங்கலுக்கு இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க! பாக்குறவங்க அசந்து போய்டுவாங்க!