MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pongal rangoli designs 2023: பொங்கலுக்கு இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க! பாக்குறவங்க அசந்து போய்டுவாங்க!

Pongal rangoli designs 2023: பொங்கலுக்கு இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க! பாக்குறவங்க அசந்து போய்டுவாங்க!

Pongal Rangoli Designs 2023: பொங்கல் விழாவில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ரங்கோலி கோலங்களை எப்படி போடுவது என்பதை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
maria pani
Published : Jan 10 2023, 06:22 PM IST| Updated : Jan 16 2023, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ்நாட்டில் கோலமிடாமல் கொண்டாடும் விழாக்கள் மிக சொற்பம். அதிலும் பொங்கல் விழா என்றால் கோலங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். கோலங்கள் அழகை மட்டுமல்ல; செழுமையையும், மகிழ்ச்சியையும் அடையாளப்படுத்தும். இந்த பொங்கலுக்கு நீங்கள் வரைய கூடிய சில டிசைன்களை இங்கு காணலாம். 

 

28

வீட்டு முற்றத்தில் அரிசி மாவில் கோலமிட்டு பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் உணவிடும் பாரம்பரியம் தமிழர்களுடையது. பிற உயிர்கள் வாழ்வதை ஆதரிக்கும் ஜீவ காருண்யம் கோலங்களில் வெளிப்படும். 

 

38

கோலங்களில் புள்ளிக் கோலம், ரங்கோலி போன்ற வகைகள் உள்ளன. கிராமங்களில் பெரியவர்கள் கோலமிட சிறியவர்கள் வண்ணமிட பொங்கல் பண்டிகை களைகட்டும். நகரங்களிலும் இந்த வழக்கம் மாறவில்லை. சில அமைப்புகள் கோலங்களுக்கு போட்டி நடத்தி பரிசுகளும் வழங்கி வருகின்றன.

இதையும் படிங்க; Pongal recipe: பொங்கல் பண்டிகையில் செய்ய கூடிய செம்ம ருசியான கொத்தமல்லிப் பொங்கல்!

48

சாணத்தால் வீட்டைச் சுற்றிலும் மொழுகி கோலம் போடுவது இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் (கிமு 2500) முன்னரே கோலங்களின் வரலாறு தொடங்கிவிட்டது. மகாபாரதத்தில், கோபியர்கள் (பணிப்பெண்கள்) தங்கள் அன்புக்குரிய கிருஷ்ணர் இல்லாதபோது அவர்கள் அனுபவித்த வலியை மறக்க கோலம் வரைந்ததாக கூறப்படுகிறது. பின்னாளில் கோலம் வரைதல், வாத்ஸ்யனரின் காமசூத்திரத்தில் உள்ள 64 கலை வடிவங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. 

58

உத்தரப்பிரதேசத்தில் சஞ்சி, வங்காளத்தில் அல்பனா, ராஜஸ்தானில் மந்தனா, மத்தியப் பிரதேசத்தில் சௌக்பூர்ணா, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ரங்கோலி, ஆந்திராவில் முக்குலு மற்றும் கேரளாவில் பூவிடல் என்று அழைக்கப்படுகிறது. கோலமிடுதல் ஓர் இந்து பாரம்பரியம் எனக் கூறப்பட்டாலும், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கும் கோலமிடும் பழக்கம் உள்ளது.   கௌதம புத்தர் இக்கலையில் வல்லவர் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க; Pongal 2023: பொங்கல் பண்டிகையில் நற்பலன் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானம் செய்யணும் தெரியுமா?

68

அழகியலில் முதன்மை பங்கு வகிக்கும் அரிசி கோலம், ஜீவகாருண்யத்தின் பிரதிபலிப்பு. இது மகிழ்ச்சியும் செழிப்பையும் குறிக்கிறது.  வீடுகளின் மீது வரையப்படும் கோலம்,  பிரகாசமான காவி நிறம் ஆகியவை தீய மற்றும் விரும்பத்தகாத சக்திகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. 

பொங்கல் நாளில், குடும்ப உறுப்பினர்கள் இணைந்து அரிசி மாவைக் கொண்டு கோலம் வரைவார்கள். ஒரு உருளைக் கம்பியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி இணையான நேர்கோடுகளை வரையலாம். புள்ளிக் கோலம், ரங்கோலி என்று பல பரிணாமங்களில் கோலம் வந்துவிட்டது. 

இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

78

அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலமிடுவர். ஆண்கள் அடுப்பு அமைத்து பொங்கல் பானையை அதன் மீது வைத்து பொங்கல் வைக்க தயார் செய்வர். பாரம்பரியமாக, வீட்டின் முன்புறம் அல்லது வீட்டின் பக்கவாட்டில் கோலம் போடப்படுகிறது. அதன் மீதுதான் அடுப்பு அல்லது விறகு அடுப்பு வைத்து பொங்கல், சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி வைக்கப்படுகிறது. 

88

இப்போது கோலம் வரைய தெரியாதவர்களுக்காக கோல அச்சுக்கள் வந்துள்ளன. இங்கு கொடுக்கப்பட்டுள்ள மலர் கோலம், ரங்கோலி கோலங்களை வீட்டின் முன்பு போட்டு பொங்கல் அன்று அசத்துங்கள். 

இதையும் படிங்க; Honey for skin: பொங்கல் அன்று பொலிவான சருமம் வேண்டுமா? ஒரு தக்காளியும் தேனும் போதும் இதை ட்ரை பண்ணுங்க!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved