- Home
- Lifestyle
- Nipple Discharge : கருத்தரிக்கும் முன் மார்பில் இருந்து பால் கசியுதா? பயப்படாதீங்க! இதான் காரணம்...
Nipple Discharge : கருத்தரிக்கும் முன் மார்பில் இருந்து பால் கசியுதா? பயப்படாதீங்க! இதான் காரணம்...
கருவுறும் முன்பே உங்களுடைய மார்பிலிருந்து பால் போன்ற திரவம் வெளியேற்றப்பட்டால் என்ன காரணம் என்பதை இந்த்ப் பதிவில் காணலாம்.

Leaking Nipples Causes
உங்களுடைய மார்பிலிருந்து பால் போன்ற திரவம் வெளியேறுவது கவலை அளிக்கக் கூடும். கருவுறாமலே இந்த பிரச்சனை வரலாம். பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் ஏற்படக் கூடும். இது கர்ப்பத்துடன் தொடர்பு இல்லாத ஹார்மோன் சமநிலையின்மைய நடக்கலாம். மாதவிடாய் சுழற்சியில் வரும் சீரற்றத்தன்மை, கருப்பை நீர்க்கட்டிகள், மன அழுத்தம் அல்லது உடல் எடை மாற்றங்களுடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்களால் வரலாம்.
முக்கிய காரணங்கள்
- ஹார்மோன் சமநிலையின்மை
- மார்பில் அதிகமான பாலியல் செயல்பாடு, மார்பகங்களை கிளர்ச்சி அடைய செய்தல்
- சில வகை மருந்துகளும் காரணம்
- மார்பக கட்டியும் காரணமாக இருக்கலாம்.
கேலக்டோரியா!
இதற்கு கேலக்டோரியா எனப்படும் ஒரு நிலையும் காரணமாக இருக்கலாம். இது தாய்ப்பாலின் பொருத்தா உற்பத்தியைக் குறிக்கும். ஹார்மோன்களில் சமமற்ற நிலை இருப்பதால் வரலாம். அதிலும் பால் உற்பத்திக்கு உதவும் புரோலாக்டின் ஹார்மோன் அளவு அதிகரிப்பதும் காரணமாக இருக்கலாம். இறுக்கமான ஆடைகள் அணிவதும் அதனால் ஏற்படும் உராய்வும் உணர்திறன் மிக்கவர்களுக்கு மார்பில் வெள்ளை திரவம் வெளியேற காரணமாக இருக்கும்.
சிலருக்கு மார்பில் பால் போன்ற வெள்ளை திரவம் வருவது தானாக நின்றுவிடும். ஆனால் அடிக்கடி வந்தால் கவனிக்காமல் விடக்கூடாது. அதிலும் உடலில் எந்த தூண்டுதலும் இல்லாமல் ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவ பரிசோதனை
இதற்கு மருத்துவரீதியாக ஏதேனும் காரணமா என சோதிக்கப்படும். மாதவிடாய் சுழற்சி சரியாக உள்ளதா? என பார்க்கப்படும். பின் மார்பக பரிசோதனை மூலம் நோயறிதல், ஹார்மோன் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. பொதுவாக புரோலாக்டின் அளவை கண்டறிய இரத்த பரிசோதனை செய்வார்கள். இதன் அளவுகள் அதிகம் இருந்தால் மூளையின் எம்ஆர்ஐ, இமேஜிங் ஆய்வுகள் செய்யப்படும்.