பெற்றோரே!! பள்ளிக்கு போற குழந்தைகளுக்கு 'இது' முக்கியம்!! காலைல தவறாம கொடுங்க!!
குழந்தைகளுக்கு காலையில் கொடுக்கும் உணவு முக்கியம். இதை மூளை உணவு என்பார்கள்.

குழந்தைகளுக்கு காலை உணவு ஏன் முக்கியம்?
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் சில விஷயங்களை தவறாமல் கொடுக்க வேண்டும். அதில் காலை உணவும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டியது. இதை மூளை உணவு என்பார்கள் நிபுணர்கள். காலை உணவை உண்ணும் குழந்தைகள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க ஆற்றல் கிடைக்கும்.
தினமும் காலையில் எழுந்ததும் குழந்தைகளை பல் துலக்க பழக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்த வேண்டும். காலை கடன்களை முடித்து குளித்த பின் கண்டிப்பாக காலை உணவை கொடுக்க வேண்டும். அது அவர்களுக்கு அத்தியாவசியமானது.
காலை உணவை தவிர்த்தால்...
பள்ளிக்கு செல்லும் உங்களுடைய குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்க தவறினால் அவர்களுடைய மூளையின் ஆரோக்கியத்தை நீங்களே பாழ்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். காலையில் வகுப்புகளில் சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவும் இருக்க குழந்தைகளுக்கு போதுமான ஆற்றல் தேவை. இதற்கு அவர்கள் காலை உணவை அதுவும் சத்தான உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். காலை உணவுகளை எடுத்துக் கொள்ளாத குழந்தைகள் வகுப்பில் மந்தமாக காணப்படுவார்கள். போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் உடலில் எந்த வலிமையும் இல்லாமல் சோர்வாக இருப்பார்கள்.
காலை உணவின் நன்மைகள்:
உங்களுடைய குழந்தை வகுப்பில் நடத்தும் ஒவ்வொரு பாடத்தையும் ஆர்வமாக கவனிக்க காலை உணவு அவசியமானது. காலையில் புரதச்சத்து, நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். காலையில் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்வதால் அவர்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. படிக்கவும், விளையாடவும் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. காலையில் செரிப்பதற்கு மிதமான அதே சமயம் அனைத்து சத்துகளும் அடங்கிய உணவை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் வளர!
குழந்தைகள் காலை உணவை உண்பதால் அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அறிவாற்றல் மேம்படவும், சிந்திக்கவும், விரைவில் கற்றுக் கொள்ளவும் காலை உணவு அவசியம்.
குழந்தைகளின் ஆரோக்கியம் காலை உணவில் இருக்கிறது. அதை சரியாக கொடுத்தால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்காது. மூளையும் நன்கு செயல்படும். அதை தவறாமல் கொடுங்கள்.