Pre-KG செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.

Parenting Tips For Pre-Kg Kids Parents : இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை 3 வயதிலே பெற்றோர் பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். ஜூன் மாதம் முதல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லத் தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு அந்த வயதில் என்னென்ன விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என காணலாம்.

உச்சரிப்பு, எழுதுதல்

குழந்தைகள் அடிப்படையில் கற்றுக் கொள்ள வேண்டியது உச்சரிப்பும், எழுதுதலும் தான். வாசிப்பை பழக்க அவர்களுக்கு எழுத்துக்களையும், உச்சரிப்பையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுடன் எழுத்துக்களை படிப்பதால் அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறன் மேம்படும். புத்தகங்களின் மீது ஆர்வத்தை சிறுவயதில் வரவைத்தால் வாழ்நாள் முழுக்க கற்றலை நேசிப்பார்கள். ஆரம்பத்தில் படங்களைக் கொண்ட புத்தகங்கள் (போட்டோ கார்டுஸ்) மூலம் வாசிப்பை மேம்படுத்த வேண்டும்.

பெயர்கள் அறிதல்

குழந்தைகள் அடுத்தவரை சுற்றியுள்ள பொருள்களின் பெயர்களை அறிந்து கொள்வது கற்றலில் தொடக்கம் படிகளை எண்ணுவது வீட்டை சுற்றி இருக்கும் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வது வண்ணங்கள் வடிவங்கள் போன்றவற்றின் பெயர்களை அறிந்து கொள்வது போன்றவை குழந்தைகளுடைய கற்றல் செயல்பாட்டை சுறுசுறுப்பாக மாற்றக்கூடியது ஆகவே பெற்றோர் குழந்தைகளுக்கு இது போன்ற அடிப்படையான விஷயங்களை சொல்லித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும்.

நல்ல பழக்கவழக்கங்கள்:

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுப்பது அவசியம். அவர்களுடைய சிறுவயதிலேயே சாப்பிடுவது, பல் துலக்குவது, சரியான நேரத்தில் தூங்கச் செல்வது போன்ற பழக்கங்களை கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். சிறுவயதில் அவர்கள் கற்றுக் கொடுக்கும் பழக்கங்கள் அவர்களுடைய எதிர்காலத்தை வளமாக வைத்திருக்க உதவும்.

சுதந்திரம்

குழந்தைகள் வளரும் போது சுதந்திரமாகவும், பிரச்சனைகளை தீர்க்கும் திறனை அறிந்தவர்களாகவும் வளர்வது அவசியம். குழந்தைகள் தங்களை அலங்கரித்துக் கொள்ளவும் அவர்களுடைய ஆடைகளை தேர்ந்தெடுக்கவும் பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அவர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக அனைத்து வேலைகளையும் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதை பெற்றோர் நிறுத்த வேண்டும். தங்களுக்கான விஷயங்களை தாங்களே குழந்தைகள் செய்து பழகுமாறு அவர்களை வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும்.