- Home
- Gallery
- Parenting Tips : உங்க குழந்தை ஸ்கூல் விட்டு வந்தவுடன் முதல்ல 'இந்த' கேள்விகளைக் கேளுங்கள்..!
Parenting Tips : உங்க குழந்தை ஸ்கூல் விட்டு வந்தவுடன் முதல்ல 'இந்த' கேள்விகளைக் கேளுங்கள்..!
Parenting Tips : பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டிற்கு வந்தவுடன் அவர்களிடம் சில கேள்விகளை பெற்றோர்கள் கண்டிப்பாக கேட்கவேண்டும் அது என்ன மாதிரியான கேள்விகள் என்று இங்கு பார்க்கலாம்.

குழந்தைகள் ஸ்கூலில் இருந்து வந்ததும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றோர்கள் செய்து கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால், இதனுடன் சில கேள்விகளையும் குழந்தைகளிடம் கண்டிப்பாக கேட்க வேண்டும். அது என்ன மாதிரியான கேள்விகள் என்று இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
அன்புடன் அரவணையுங்கள்: உங்களுக்கு குழந்தை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் முதலில் அவர்களை அன்பாக அரவணைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் அவர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். மேலும், நீங்கள் அவர்களை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று அவர்கள் உணர்வார்கள்.
மதியம் சாப்பாடு பற்றி: குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மதிய சாப்பாடு எப்படி இருந்தது என்று கேளுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை தனது நண்பர்களின் உணவை விரும்பினால், அவர்களுக்கு பிடித்த மாதிரி நீங்களும் செய்து கொடுக்கலாம்.
நண்பர்களைப் பற்றி: உங்கள் குழந்தையின் நண்பர்கள் எப்படி, அவர்கள் எங்கே வசிக்கிறார்கள், மேலும் அவர்களின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என இது போன்ற விவரங்களை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இது உங்கள் குழந்தையின் நடத்தையை பொறுத்து கேட்கலாம்.
வீட்டுப்பாடம் பற்றி: குழந்தை ஸ்கூல் முடிஞ்சு வீட்டிற்கு வந்ததும் ஆசிரியர் கொடுத்த வீட்டு பாடம் பற்றி அவர்களிடம் கேளுங்கள். மற்றும் அவர்களை அதை செய்ய உற்சாகப்படுத்துங்கள். இதனால் அவர்கள் விரைவாக வீட்டுப்பாடங்களை முடிப்பார்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : உங்கள் குழந்தை நல்ல முறையில் வளர பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் 5 விஷயங்கள்!
பாராட்டு பற்றி: குழந்தை ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் செய்யும் முதல் விஷயம் பள்ளியில் ஆசிரியர் பாராட்டியதைப் பெற்றோரிடம் சொல்வதுதான். ஆனால், நீங்கள் உங்கள் குழந்தை சொல்லவதற்கு முன்பு அவர்களிடம் கேட்டால், அவர்கள் இன்னமும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : ஒரு குழந்தையின் பெற்றோருக்கான பெஸ்ட் அட்வைஸ்..!
மேலும் பல பெற்றோர்கள் வேலையில் மும்முரமாக இருப்பதால் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளிடம் எதையும் கேட்பதில்லை. இதனால் குழந்தையும் நாளடைவில் உங்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ளாது. எனவே, பள்ளி முடிந்து வரும் குழந்தைகளிடம் பள்ளியில் நடந்த விஷயங்களை கேளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D