Baby Powder : பச்சிளங்குழந்தைக்கு பேபி பவுடர் போடலாமா? உண்மை என்ன?!
பச்சிளங்குழந்தைகளுக்கு பேபி பவுடர் போடலாமா? கூடாதா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
பச்சிளங்குழந்தைகளுக்கு பேபி பவுடர் நல்லதா?
குழந்தை பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ரொம்பவே கஷ்டமான செயல் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு சரும பராமரிப்பு என்று வரும்போது கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் குழந்தைகளின் சருமம் மென்மையாகவும் மற்றும் உணர்திறன் உடையதாகவும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் புதிதாக குழந்தைகளை குளிப்பாட்டிய பிறகு ஒவ்வொரு முறையும் அவர்களது சரும முழுவதும் பேபி பவுடர் பூசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படி பூசுவது உண்மையில் அவர்களுக்கு நல்லதா? குழந்தைகளுக்கு பேபி பவுடர் பூசுவதால் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா? இது குறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால் உங்களது குழப்பத்தை போக்குவதற்கான விளக்கத்தை இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பேபி பவுடர் குழந்தைகளுக்கு அவசியமா?
பொதுவாக பிறந்த குழந்தைகள் உடலில் இருந்து ஒரு விதமான பால் வாசனம் வரும். இந்நிலையில் குழந்தையை குளிப்பாட்டிய பிறகும் அவர் உங்கள் மீது பேபி பவுடரை பூசுவார்கள். ஆனால் பேபி பவுடரில் மெக்னீசியம், சிலிகான் போன்ற கூறுகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தி விடும். எனவே எவ்வளவு விலை கொடுத்து வாங்கிய பவுடராக இருந்தாலும் அதை குழந்தைகளுக்கு போடவே வேண்டாம்.
பேபி பவுடர்
குழந்தைகளின் சருமத்திற்கு கடுமையான விளைவை ஏற்படுத்தும். அதாவது அது குழந்தைகளின் சருமத்துளைகளை அடைத்து சிறிய புள்ளிகள், கொப்பளங்களை ஏற்படுத்தும். சில சமயங்களில் சருமத்தில் ஒவ்வாமையையும் ஏற்படுத்தி விடும். இதனால்தான் குழந்தைகளுக்கு பேபி பவுடர் பயன்படுத்தக்கூடாது என்று குழந்தை நல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்த தவறையும் செய்யாதீங்க!!
பொதுவாகவே குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதால் ஏற்படும் புண்களுக்கு பவுடரை பயன்படுத்துவார்கள் ஆனால் அது தவறு. டயபரால் புண்கள் வருவதை தவிர்க்க, குழந்தை மலம் கழித்த பிற்கு நன்கு கழுவி, பிறகு ஒரு துண்டால் அந்த பகுதியை நன்றாக துடைக்க வேண்டும். உடனே டயப்பர் அல்லது ஆடையை போட்டுவிடக் கூடாது.
முக்கிய குறிப்பு :
- குழந்தைகளுக்கு ஏற்கனவே புண் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று அணுக வேண்டும் இலையினில் அந்தப் புண்களால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
- குழந்தைக்கு டால்க் இல்லாத பவுடர்களை பயன்படுத்தலாம். அதுவும் அளவாக தான் பயன்படுத்த வேண்டும்.
- டயபரால் குழந்தையின் சருமத்தில் ரேஷை ஏற்படுவதை தடுக்க விளக்கினை அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்.
- குழந்தையை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். அதுபோல குழந்தையின் சருமத்தை நன்றாக உலர வைக்க வேண்டும்.