MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Shirt Pocket : சட்டையில் பாக்கெட் இடது பக்கம் இருப்பது ஏன்? 99% பேருக்கு தெரியாத ரகசியம்

Shirt Pocket : சட்டையில் பாக்கெட் இடது பக்கம் இருப்பது ஏன்? 99% பேருக்கு தெரியாத ரகசியம்

Shirt Pocket Secret : சட்டைகளில் பாக்கெட்டுகள் இருப்பது உதவிகரமாக இருக்கும். அந்த பாக்கெட்டுகள் பெரும்பாலும் இடதுபுறம் தான் இருக்கும். அதன் பின்னணியில் உள்ள காரணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 31 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Fact behind Shirt Pocket
Image Credit : AI Image

Fact behind Shirt Pocket

நாம் தினமும் அணியும் சட்டைகளில் ஒரு விஷயத்தை பெரும்பாலும் கவனித்திருப்போம். ஆண்கள் அணியும் பெரும்பாலான சட்டைகளிலும், பல பெண்கள் அணியும் ஷர்ட்களிலும் பாக்கெட் பெரும்பாலும் இடது பக்கத்தில்தான் இருக்கும். ஆனால், ஏன் வலது பக்கத்தில் இல்லாமல் இடது பக்கத்திலேயே வடிவமைக்கப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.

வரலாற்றை திருப்பிப் பார்த்தால், ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட சட்டைகளில் பாக்கெட் என்ற வசதியே இல்லை. தேவையான பொருட்களை தனியாக பைகளில் அல்லது இடுப்பில் கட்டிக்கொண்டு செல்வதே வழக்கமாக இருந்தது. பின்னர் பேனா, சிறிய நோட்டுப் புத்தகம், பணம் போன்றவற்றை எளிதாக எடுத்துச் செல்லும் வசதிக்காக சட்டைகளில் பாக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.

T-Shirt : டி-ஷர்ட் என்று எப்படி பெயர் வந்தது? சுவாரசிய கதை தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இடது பக்கம் தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?
Image Credit : Asianet News

இடது பக்கம் தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

சட்டையின் இடது பக்கத்தில் பாக்கெட் அமைக்கப்பட்டதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை. இருப்பினும், பயன்பாட்டு வசதியே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. உலக மக்களில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் கொண்டவர்கள். வலது கையால் பொருட்களை எடுத்து பயன்படுத்துவதற்கு, இடது மார்புப் பகுதியில் இருக்கும் பாக்கெட் மிகவும் வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே சட்டை வடிவமைப்பாளர்கள் இடது பக்க பாக்கெட்டை பொதுவான வடிவமாக ஏற்றுக்கொண்டனர்.

white shirt care பழுப்பு நிற வெள்ளை உடைகளை பளிச்சென மாற்ற 6 மேஜிக் ஐடியாக்கள்!

Related Articles

Related image1
காலர் வைத்த பேன்டில்... கருப்பு கலர் டைட் டீ ஷர்ட் அணிந்து வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் பிக்பாஸ் குயின் அர்ச்சனா!
Related image2
T-Shirt : டி-ஷர்ட் என்று எப்படி பெயர் வந்தது? சுவாரசிய கதை தெரியுமா?
34
பெண்களின் சட்டைகளிலும் அதே வடிவமைப்பு
Image Credit : X

பெண்களின் சட்டைகளிலும் அதே வடிவமைப்பு

முதலில் ஆண்களின் சட்டைகளில் மட்டுமே பாக்கெட் இடம்பெற்றது. பெண்களின் ஆடைகளில் பாக்கெட் பெரும்பாலும் இடம்பெறவில்லை. ஆனால் காலப்போக்கில் பெண்களின் வசதியையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஷர்ட்களிலும் பாக்கெட்டுகள் சேர்க்கப்பட்டன. அதிலும் இடது பக்க வடிவமைப்பே அதிகமாக பயன்படுத்தப்பட்டது. முன்பெல்லாம் வலது பக்கம் பாக்கெட் இருந்தால் அதை பலரும் ஆச்சர்யமாக பார்ப்பார்கள். ஆனால் தற்போதையே காலகட்டத்தில் இரண்டு பக்கமும் பாக்கெட் இருப்பது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது.

அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை – ஒரு டீசர்ட் இத்தனை லட்சமா?

44
இன்று ஃபேஷனின் ஒரு பகுதியாக மாறிவிட்டது
Image Credit : instagram

இன்று ஃபேஷனின் ஒரு பகுதியாக மாறிவிட்டது

தற்போது ஃபேஷன் உலகில் பல புதிய வடிவமைப்புகள் வந்துவிட்டன. சில சட்டைகளில் வலது பக்க பாக்கெட், சிலவற்றில் இருபுற பாக்கெட்டுகள், சிலவற்றில் பாக்கெட் இல்லாத வடிவங்களும் காணப்படுகின்றன. இருப்பினும், இடது பக்க பாக்கெட் கொண்ட பாரம்பரிய வடிவமைப்பே இன்னும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயன்பாட்டு வசதியுடன் சேர்ந்து, சட்டையின் தோற்றத்தையும் அழகாக காட்டுவதால், இடது பக்க பாக்கெட் இன்று வரை ஒரு நிலையான ஃபேஷன் அம்சமாகவே தொடர்கிறது. சட்டை மட்டுமின்றி டீ-சர்ட்களிலும் இதே நடைமுறை தொடர்கிறது.

“வேட்டி, சட்டை போட்டாலே தனி கெத்து தான்டா”... முரட்டு தாடியுடன் மிரட்டலாக போஸ் கொடுத்த நடிகர் சூரி...!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Toilet : தம்மாத்தூண்டு ஐஸ் கட்டிகள் போதும்... பிரஷ் போடாம டாய்லெட்டை ஈஸியா கிளீன் பண்ணலாம்..!
Recommended image2
Mixer Grinder Cleaning: வெறும் 2 நிமிடத்தில் மிக்ஸி ஜார் பிசுக்கு நீங்க சூப்பர் டிப்ஸ்! தேய்க்கவே வேணாம்!
Recommended image3
paneer tawa pulao : பன்னீர் தவா புலாவ்...திடீரென வீட்டிற்கு வரும் கெஸ்ட்டை அசத்த சூப்பர் உணவு
Related Stories
Recommended image1
காலர் வைத்த பேன்டில்... கருப்பு கலர் டைட் டீ ஷர்ட் அணிந்து வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் பிக்பாஸ் குயின் அர்ச்சனா!
Recommended image2
T-Shirt : டி-ஷர்ட் என்று எப்படி பெயர் வந்தது? சுவாரசிய கதை தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved