- Home
- Lifestyle
- Cooking Tips : முட்டை வேக வைக்கும் தண்ணீரில் இந்த 1 பொருள் சேர்த்தா போதும்.. ஒரு கீறல் விழாம உடையாமல் வரும்!
Cooking Tips : முட்டை வேக வைக்கும் தண்ணீரில் இந்த 1 பொருள் சேர்த்தா போதும்.. ஒரு கீறல் விழாம உடையாமல் வரும்!
முட்டை மற்றும் உருளைக்கிழங்கு வேக வைக்கும் தண்ணீரில் எந்தவொரு பொருளை சேர்க்க வேண்டும்? அதன் பயன் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டை மற்றும் உருளைக்கிழங்கு வேக வைப்பது சின்ன வேலை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதிலேயும் ரிஸ்க் இருக்கு. அதாவது முட்டை வேக வைக்கும் போது சில சமயங்களில் வெடிக்கும். அதுபோல உருளைக்கிழங்கு வேக வைக்கும் பாத்திரமும் கருப்பாக மாறிவிடும். இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் கீழே சொன்ன டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணினால் போதும். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
முட்டை : முட்டை வேக வைக்கும் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து விடுங்கள். இப்படி செய்யும் போது முட்டை வெடிக்காமல் இருக்கும். முட்டை ஓட்டில் ஒட்டவும் ஒட்டாது. மேலும் முட்டையின் ஓட்டை பிரிப்பதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும்.
அதுபோல முட்டை சமைத்த பிறகு கிச்சனில் கடுமையான கவிச்சை வாடை வரும். முட்டை வேக வைக்கும் நீரில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொண்டால் முட்டை வாடை அடிக்காது.
உருளைக்கிழங்கு : சில சமயங்களில் உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது சரியாக வேகாமல் இருக்கும். இந்த பிரச்சனையை தவிர்க்க உருளைக்கிழங்கு வேக வைக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு சீக்கிரமாக வெந்தும் விடும்.
அதுபோல உருளைக்கிழங்கு வேக வைக்கும் பாத்திரம் கருப்பாகிவிடும். அதை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். மேலும் அந்த கருமையும் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும். எனவே உருளைக்கிழங்கு வேக வைக்கும் பாத்திரம் கருப்பாக மாறாமல் இருக்க உருளைக்கிழங்கை வேக வைக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். மேலும் உருளைக்கிழங்கை மூடி போடாமல் வேக வைக்கவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

