MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வால்நட்டில் நிறைய நன்மைகள் இருக்கு.. ஆனா இவங்க சாப்பிட்டால்  வேற மாதிரி ஆகிடும்!

வால்நட்டில் நிறைய நன்மைகள் இருக்கு.. ஆனா இவங்க சாப்பிட்டால்  வேற மாதிரி ஆகிடும்!

Walnut Allergy : ஊற வைத்த வால்நட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைத்தாலும், சில பிரச்சனை உள்ளவர்களுக்கு வால்நட் நல்லதல்ல.

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 25 2024, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walnut Allergy In Tamil

Walnut Allergy In Tamil

பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி, வேர்க்கடலை போன்ற பலவகைகளில் நட்ஸ்கள் உள்ளன. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். இது தவிர, இவை நம் உடலுக்கு தேவையான ஆற்றலையும், போதிய புரதச்சத்தையும் கொடுக்கும். 

உங்களுக்கு தெரியுமா.. மற்ற எல்லா நட்ஸ்களை விடவும் வால்நட் சுவையிலும், ஆரோக்கியத்திலும் சற்று வேறுபட்டது. முக்கியமாக, இது உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. அதுவும் குறிப்பாக, இதை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மைகள் கிடைக்குமாம். 

வால்நட் ஊட்டச்சத்துக்கள் :

வால்நட்டில் கொழுப்பு, பொட்டாசியம், புரதச்சத்து, கால்சியம், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தவிர, இதில் ஒமேகா-3 ஃபேட்டிக் ஆசிட் அமிலம் அதிகளவு நிறைந்துள்ளது. அதுபோலவே ஆன்டி ஆக்சிடன்ட்களும் அதிக அளவில் காணப்படுகின்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Walnut Allergy In Tamil

Walnut Allergy In Tamil

ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் :

மூளைக்கு நல்லது :

வால்நட்டில் இருக்கும் வைட்டமின்கள், புரத சத்துக்கள் போன்ற பல சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்ட உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஒமேகா-3 அமிலம் ஞாபகம் மறதியை போக்க முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நினைவுத் திறனை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. இதனால்தான் வளரும் குழந்தைகளுக்கு ஊறவைத்த வால்நட் தினமும் காலை கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

மார்பகப் புற்றுநோய் :

தினமும் பெண்கள் ஊறவைத்த வால்நட் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. அதுபோல இது கணைய புற்றுநோய் வருவதை  தடுக்க உதவுகிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே, புற்றுநோய்  அபாயத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால் தினமும் காலை ஊற வைத்த வால்நட் கண்டிப்பாக சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க:  ஊறவைத்த வால்நட்.. காலையில வெறும் வயிற்றில் சாப்பிடுங்க..ஏன் தெரியுமா?

35
Walnut Allergy In Tamil

Walnut Allergy In Tamil

 

மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் :

உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல். இது அஜீரணக் கோளாறால் ஏற்படுகிறது. எனவே, நீங்கள் செரிமான பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், தினமும் ஊறவைத்த வால்நட் சாப்பிட்டு வந்தால் விரைவில் செரிமான பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். இது தவிர வயிற்றில் சுரக்கும் அமிலமும் சீராகும்.

பித்தப்பை கற்களை கரைக்கும் :

வால்நட் பித்தப்பை கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. ஆகவே பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் தினமும் ஊறவைத்த வால்நட் சாப்பிட்டு வந்தால் இந்த பித்தப்பை கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலியில்லாமல் கரையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :

வால்நட்டில் அதிகளவு புரதம் மற்றும் நல்ல கொழுப்பு இருப்பதால் இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. குறிப்பாக தினமும் காலை ஊற வைத்த வால்நட்டை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பருவ காலத்தில் வரும் நோய்களிலிருந்து எளிதாக தப்பித்து விடலாம்.

இதையும் படிங்க:  வளரும் குழந்தைக்கு தினமும் இரண்டு ஊறவைத்த வால்நட் கொடுங்க... இத்தனை நன்மைகள் கிடைக்கும்!

45
Walnut Allergy In Tamil

Walnut Allergy In Tamil

இளமையாக இருக்க உதவுகிறது :

வால்நட் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்கக்கூடிய ஆற்றல் இதில் உள்ளது. எனவே, தோல் சுருக்கத்தை சரி செய்ய தினமும் காலை ஊற வைத்த வால்நட் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இதனால் எப்போதும் இளமையாக இருக்கலாம்.

அதுபோல நீங்கள் வால்நட்டுடன் கொஞ்சம் பால் சேர்த்து அதை முகம் மற்றும் கழுத்தில் ஸ்கிரப்பாக போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள், கரும்புள்ளிகள், கறைகள் நீங்கும்.

நல்ல தூக்கத்திற்கு உதவும் :

இன்றைய காலத்தில் பலர் தூக்கமின்னை பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக ஷிப்ட் டியூட்டியில் வேலை செய்பவர்கள் தான் இந்தப் பிரச்சனையால் ரொம்பவே அவஸ்தைப்படுகிறார்கள். அந்த லிஸ்டில் நீங்களும் இருக்கிறீர்கள் என்றால், தினமும் இரவு தூங்கும் முன் பாலில் வால்நட் கலந்து குடியுங்கள். இல்லையெனில், வெறுமனே அப்படியே சாப்பிடலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

55
Walnut Allergy In Tamil

Walnut Allergy In Tamil

என்னதான் வால்நட் அதிக நன்மைகளை நமக்கு வழங்கினாலும், ஒரு சிலருக்கு இது ஒத்துப் போகாதாம். அதாவது அவர்கள் வால்நட் சாப்பிடவே கூடாதாம். அப்படி யார் யாரெல்லாம் வால்நட் சாப்பிடக்கூடாது இப்போது பார்க்கலாம்.

1. வயிற்று புண், வயிற்று எரிச்சல், வயிற்றுப் பிரச்சனை போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் வால்நட் சாப்பிட வேண்டாம்.

2. நட்ஸ் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்றால் அப்படிப்பட்டவர்கள் வால்நட் சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் தோல் பிரச்சனை, சுவாச பிரச்சனை ஏற்படும்.

3. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் வால்நட் சாப்பிட வேண்டாம் ஏனெனில் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

4. குறிப்பாக ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வால்நட் கொடுக்கவே கூடாது.

முக்கிய குறிப்பு : வால்நட் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும் இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு 5 அல்லது 7 சாப்பிடுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tattoo meaning : டாப் 10 பாப்புலர் டாட்டூக்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஒவ்வொரு டிசைனுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை!
Recommended image2
Water Tank: வாட்டர் டேங்க்கை எங்கு வைப்பது நல்லது? தரையில் வைத்தால் இவ்வளவு ஆபத்துகளா? முழு விவரம்!
Recommended image3
Duplicate Branded Product : பிராண்டட் பெயரில் டூப்ளிகேட் விற்பனை..எந்தெந்த பொருட்களில் உஷார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved