முட்டையை எப்போது சாப்பிட வேண்டும்? யார் முட்டையை சாப்பிடவே கூடாது தெரியுமா?
Right Time to Eat Eggs : முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால், முட்டை சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?
Right Time to Eat Eggs In Tamil
முட்டை காலை உணவின் சூப்பர் ஃபுட் ஆகும். முட்டை புரதம், கால்சியம் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால், இது எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், நம்முடைய முழு உடலையும் ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகிறது. இதனால்தான் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
Right Time to Eat Eggs In Tamil
ஆனால், முட்டை சாப்பிட சிறந்த நேரம் எது? என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இதுதவிர, முட்டையை ஏன் சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். எனவே இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: அடிக்கடி முட்டை சாப்பிடறவங்க 'கவனிக்க' வேண்டிய முக்கியமான விஷயங்கள்!!
Right Time to Eat Eggs In Tamil
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
முட்டை அளவில் சிறியது. ஆனால் அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதன் காரணத்திற்காக தான் என்னவோ இது முழுமையான உணவு என்று சொல்லப்படுகிறது. ஒரு வேக வைத்த முட்டையில் சுமார் 77 கலோரிகள் இருக்கிறது. இது தவிர அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி5, வைட்டமின் பி12, பைட்டமின் டி, வைட்டமின் டி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை உள்ளன. முட்டை புரதத்தின் நல்ல மூலமாகும் என்று நம் அனைவரும் அறிந்ததே. மேலும் இது இதய ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகளையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தினமும் முட்டை சாப்பிடுங்க.. ஆனா இந்த '6' உணவு கூட மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க!.. ஏன் தெரியுமா?
Right Time to Eat Eggs In Tamil
முட்டை சாப்பிட சிறந்த நேரம் எது?
சிறந்த பலன்களைப் பெற காலை உணவில் முட்டை சாப்பிடுவது நல்லது. இது உடலை முழு ஆற்றலுடன் நிரப்புகிறது மற்றும் நாள் முழுவதும் திருப்தியாக உணர வைக்கிறது. மேலும் செரிமான அமைப்பு காலையில் சிறப்பாக செயல்படுகிறது. காலையில் முட்டை சாப்பிட்டால், அதில் இருக்கும் புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் செரிமான அமைப்பு உடைவதற்கு எளிதாக்குகிறது.
எடையில் இழப்புக்கு முட்டை எப்படி சாப்பிடலாம்?
எடையில் இழப்புக்கு வேக வைத்த முட்டை தான் நல்லது. ஏனெனில் குறைந்த வெப்பத்தில் முட்டையை சமைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் ஆக்ஸிஜனேற்றத்தை குறைக்கிறது மற்றும் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை தக்க வைக்க பெரிதும் உதவுகிறது. எனவே வேக வைத்து முட்டை சாப்பிடுவது எடை இழப்புக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது.
Right Time to Eat Eggs In Tamil
முட்டை சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள்:
முட்டையில் கண் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது எடையை குறைக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இது தவிர இது எலும்புகளை வலுவாக்கவும், செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஒரு சிலருக்கு முட்டை சாப்பிடுவது உடலில் ஒருவித பிரச்சினையை ஏற்படுத்தும். அதுவும் குறிப்பாக முட்டையை பச்சையாகவோ அல்லது பாதியாக வேகவைத்து சாப்பிட்டால் இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும் அத்தகைய சூழ்நிலையில், முட்டையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். சிலருக்கு இதை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். மேலும் இதனால் சுவாசிப்பதில் சிரமம், முகம் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர, முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இதை நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.