MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அடிக்கடி முட்டை சாப்பிடறவங்க 'கவனிக்க' வேண்டிய முக்கியமான விஷயங்கள்!!

அடிக்கடி முட்டை சாப்பிடறவங்க 'கவனிக்க' வேண்டிய முக்கியமான விஷயங்கள்!!

Egg Eating Mistakes : முட்டை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது தான். ஆனால் அவற்றை சாப்பிடும் போது நாம் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 14 2024, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Egg Eating Mistakes In Tamil

Egg Eating Mistakes In Tamil

ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான புரதம், வைட்டமின்கள் முட்டையில் கிடைக்கின்றன. ஒரே ஒரு முட்டையில் ஒன்பது அமினோ அமிலங்கள் உள்ளன. வைட்டமின் பி12, வைட்டமின் பி2, வைட்டமின் டி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் ஏராளமாக உள்ளன. அதனால்தான் முட்டை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Egg Eating Mistakes In Tamil

Egg Eating Mistakes In Tamil

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆரோக்கியமான கொழுப்புகளும் முட்டையில் ஏராளமாக உள்ளன. இவை இதயம், மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. முட்டைகளில் உள்ள லுடீன், ஜியாக்சாந்தின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. முட்டையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இதை சாப்பிடுவதால் உங்கள் மூளை மற்றும் எலும்புகளுக்கு நன்மை கிடைக்கும். எனவே, அதை நம் ஆரோக்கியத்திற்காக சரியாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இத்தனை நன்மைகள் கொண்ட முட்டையை சாப்பிடும் விஷயத்தில் பலர் தவறுகள் செய்கிறார்கள். அந்த தவறுகள் என்ன? முட்டையை எப்படி சாப்பிடக்கூடாது? என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

35
Egg Eating Mistakes In Tamil

Egg Eating Mistakes In Tamil

இப்படி முட்டை சாப்பிடக்கூடாது..

முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, ஆனால் நீங்கள் பச்சை முட்டையை சாப்பிடக்கூடாது. அரை வேக்காத முட்டையும் கூடாது. பச்சையாக அல்லது சரியாக வேக வைக்காத முட்டைகளை சாப்பிடுவதால் சால்மோனெல்லா தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே, நீங்கள் முட்டைகளை சாப்பிடும் போதெல்லாம் அவற்றை நன்றாக வேக வைக்க வேண்டும். மேலும் நேரடியாக பச்சை முட்டையை சாப்பிடக்கூடாது.

முட்டையின் வெள்ளைக்கரு & மஞ்சள் கரு..எது நல்லது?

முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது, மஞ்சள் கரு அல்ல என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய சத்துக்கள் உள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள் A, D, E, K, B12 ஃபோலேட் போன்ற முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், லுடீன் மற்றும் கோலின் உள்ளன. இவை உங்கள் ஆரோக்கியத்திலும், குறிப்பாக மூளையிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே வெள்ளைக்கரு மட்டுமல்ல, மஞ்சள் கருவையும் சேர்த்து முழு முட்டையையும் சாப்பிட வேண்டும்.

45
Egg Eating Mistakes In Tamil

Egg Eating Mistakes In Tamil

முட்டையை இவற்றுடன் சாப்பிடக்கூடாது...

மக்கள் பலவிதமான உணவுகளுடன் முட்டைகளைச் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் தவறான உணவு உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

உதாரணமாக, நீங்கள் வெள்ளை ரொட்டி போன்ற அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகளுடன் முட்டைகளைச் சாப்பிட்டால், அது உங்கள் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் முட்டையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு சரியாகக் கிடைக்காது. எனவே முட்டைகளைச் சாப்பிடும்போதெல்லாம் உணவு கலவையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வெண்ணெய் பழம் அல்லது காய்கறிகள் போன்றவற்றை முட்டைகளுடன் சாப்பிட முயற்சிக்கவும்.

இதையும் படிங்க: முட்டையை தனியா சாப்பிடுறீங்களா? கீரையுடன் சேர்த்து சமைத்தால் எவ்ளோ சத்து கிடைக்கும் தெரியுமா?

55
Egg Eating Mistakes In Tamil

Egg Eating Mistakes In Tamil

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

முட்டைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது உண்மைதான், ஆனால் அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் சரியான சரிவிகித உணவை உட்கொள்ள முடியாமல் போகும். நீங்கள் ஒரே நேரத்தில் அதிக முட்டைகளைச் சாப்பிடும்போது, அது உங்கள் கலோரிகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கொழுப்பின் அளவையும் அதிகரிக்கும்.

சிலருக்கு, இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, நீங்கள் முட்டைகளை உட்கொண்டால், ஆரோக்கிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அவற்றின் அளவைக் கட்டுப்படுத்துங்கள். ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் முட்டைகளைச் சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  தைராய்டுக்கு நிரந்தர தீர்வு இல்லன்னாலும், அவங்க முட்டை சாப்பிட்டால் 'இப்படி' ஒரு மாற்றம் வரும்!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved