MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!

Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!

ரயில் பயணத்தில் பை தொலைந்தால் பதற வேண்டாம்! உடனே TTE அல்லது ரயில்வே காவல்துறையிடம் (RPF) புகார் அளித்து, FIR பதிவு செய்யுங்கள். மேலும், 139 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 26 2026, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரயில் பயண உதவி
Image Credit : Gemini AI

ரயில் பயண உதவி

ரயிலில் உங்கள் பை தொலைந்துவிட்டதை அறிந்ததும் பதற்றமடையாமல், உடனடியாக அங்கிருக்கும் TTE, கார்டு அல்லது இதர ரயில்வே ஊழியர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். நீங்கள் ஏறிய மற்றும் இறங்கும் இடங்கள், பயணத் தேதி, ரயில் எண், உங்கள் பை இருந்த இருக்கை மற்றும் பெட்டியின் விவரம் போன்றவற்றை அவர்களிடம் வழங்க வேண்டும். இந்தத் தகவல்கள் பை ரயிலிலேயே உள்ளதா அல்லது திருடப்பட்டுள்ளதா என்பதை ரயில்வே அதிகாரிகளுக்குக் கண்டறிய உதவும். தற்போதைய புகார்களுக்காக Rail Madad Seva என்ற வசதி பயன்பாட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, பயணத்தின்போது எவ்வித உதவி தேவைப்பட்டாலும் 139 என்ற உதவி எண்களை அழைத்து உதவிகளைப் பெறலாம்.

இதையும் படிங்க : Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
139 உதவி எண்
Image Credit : Chatgpt

139 உதவி எண்

உங்கள் பை திருடு போயிருக்கலாம் என சந்தேகம் இருந்தால், உடனடியாக ரயில்வே போலீஸ் அல்லது RPF ஊழியர்களுக்குத் தகவல் கொடுங்கள். தொலைந்த பொருட்கள் குறித்து 'ரயில் madad' செயலியில் புகார் அளிக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். 139 என்ற எண்ணுக்கு அழைத்தும் நீங்கள் உதவியைப் பெறலாம். புகார் செய்யும்போது உங்கள் மொபைல் எண், ரயில் எண், PNR எண், கோச் மற்றும் சீட் எண், பயண விவரங்கள், பையின் நிறம், அளவு, அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் போன்ற விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். 'ரயில் madad'-ல் புகார் பதிவு செய்யும்போது, தேவைப்பட்டால் புகைப்படங்கள் அல்லது பிற ஆதாரங்களையும் நீங்கள் அப்லோட் செய்யலாம்.

இதையும் படிங்க : Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?

Related Articles

Related image1
IRCTC Tour Package: பெங்களூர் டூ ராமேஸ்வரம், மதுரை! 5 நாள் டூர் வெறும் ₹10,710
Related image2
Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!
33
பை தொலைந்தால் செய்யவேண்டியது
Image Credit : Gemini AI

பை தொலைந்தால் செய்யவேண்டியது

பை தொலைந்தவுடன் தாமதிக்காமல் புகார் செய்வது மிகவும் முக்கியம். தாமதம் செய்தால், பை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிடும். நீங்கள் தகவல் கொடுத்ததும், ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன், RPF அல்லது பிற அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பார்கள். திருட்டு நடந்திருந்தால், FIR பதிவு செய்ய RPF ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ரயில்வேயில் 'Lost and Found' சேவையும் உள்ளது. எனவே, பை தொலைந்ததும் 'இனி கிடைக்காது' என்று நினைக்காமல் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் இருக்க, உங்கள் பையில் பெயர், மொபைல் எண் எழுதிய டேக் ஒன்றை மாட்டி வைப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள், பணம், முக்கிய ஆவணங்களை எப்போதும் உங்களுடனேயே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : Budhan Uccha Peyarchi : புதன் உச்ச பெயர்ச்சியில் உருவாகும் ஐயப்பன் அருள்! அசுர வளர்ச்சி பெறும் 4 ராசிகள்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ரயில் பயணப் பெட்டி விதிகள்
தொடர்வண்டி விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image2
Mangalsutra Bracelets: தினமும் அணிய கருகுமணி பிரேஸ்லெட் New டிசைன்ஸ்!
Recommended image3
Banana leaf food serving order: வாழை இலையில் சாப்பிடுறீங்களா? உணவு பரிமாறும் சரியான வரிசை இதுதான்!
Related Stories
Recommended image1
IRCTC Tour Package: பெங்களூர் டூ ராமேஸ்வரம், மதுரை! 5 நாள் டூர் வெறும் ₹10,710
Recommended image2
Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved