IRCTC Tour Package: பெங்களூர் டூ ராமேஸ்வரம், மதுரை! 5 நாள் டூர் வெறும் ₹10,710
IRCTC Tour Package: IRCTC, 'டிவைன் தமிழ்நாடு' என்ற பெயரில் பெங்களூருவில் இருந்து 5 நாள் ஆன்மிக சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேக்கேஜில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லலாம்.

பெங்களூருவில் இருந்து டூர் பேக்கேஜ்
பயண விவரங்கள்
இந்த சுற்றுலா ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெங்களூரு SMVT ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கும். ரயில் எண் 17235-ல் மாலை 5:15 மணிக்கு பயணம் ஆரம்பமாகும்.
நாள் 1: பெங்களூருவில் இருந்து இரவு நேர ரயில் பயணம்.
நாள் 2: காலையில் நாகர்கோவில் ஜங்ஷனை அடைந்ததும், கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு குமரி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை நினைவிடம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம் ஆகியவற்றைப் பார்க்கலாம். மாலையில் அழகான சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.
ராமேஸ்வரம் பயணம்
நாள் 3: அதிகாலையில் சூரிய உதயத்தைப் பார்த்த பிறகு, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, ராமேஸ்வரத்திற்குப் பயணம்.
நாள் 4: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம். பிறகு, பஞ்சமுகி அனுமன் கோயிலைப் பார்வையிடலாம். அங்கிருந்து மதுரைக்குப் பயணம் செய்து, மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலைப் பார்க்கலாம். இரவில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்குத் திரும்பப் பயணம்.
நாள் 5: காலை 09:30 மணிக்கு பெங்களூரு வந்தடைவதுடன் சுற்றுலா நிறைவடையும்.
பேக்கேஜ் விலை எவ்வளவு?
பேக்கேஜில் என்னென்ன அடங்கும்?
புக்கிங் செய்வது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.irctctourism.com மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு, பெங்களூருவில் உள்ள IRCTC அலுவலகத்தை 8595931291, 8595931290 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

