குக்கர்ல விசில் பிரச்சனையா? இந்த 1 ட்ரிக் போதும்!
குக்கரில் விசில் சரியாக வரவில்லை என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன சில எளிய வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் எல்லார் வீட்டு சமையலறையில் பிரஷர் குக்கர் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. அரிசி, பருப்பு, காய்கறிகள், இறைச்சி போன்றவற்றை விரைவாக வேகவைப்பதற்கு இல்லத்தரசிகள் பிரஷர் குக்கரை தான் அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். சொல்லப் போனால் இது இல்லத்தரசிகளின் வேலை மற்றும் நேரத்தை எளிதாக குறைக்க உதவுகிறது. ஆனாலும் சில சமயங்களில் இது பெரும் தலைவலியை ஏற்படுத்திவிடும்.
ஆமாங்க.. குக்கர் அடிக்கடி ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த சமயத்தில் அதனுடன் மல்லுக்கட்டவே நேரம் வீணாகப் போயிடும். அது என்ன பிரச்சினை என்றால், சில நேரம் குக்கரில் முறையாக விசில் வராதது தான். இதே பிரச்சனையை நீங்களும் சந்திக்கிறீர்கள் என்றால், இதனை சரி செய்வதற்கு சில எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குக்கரில் விசில் முறையாக வர டிப்ஸ்:
குக்கரில் விசில் முறையாக வரவில்லை என்றால் அந்த சிக்கலை தீர்க்க சில எளிய வழிகள் இங்கே உள்ளன. இதற்காக நீங்கள் அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையில்லை. வெறும் 5 ரூபாய் மட்டுமே போதும். இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
டிப்ஸ்:
இதற்கு முதலில் குக்கர் விசிலில் உள்ள வளையம் போன்ற பகுதியை வெளியே எடுத்து பார்த்தால், அதனுள் சிறியதாக 2 போல்டுகள் இருக்கும். அதை தூக்கி போட்டு, உங்கள் வீட்டு அருகில் இருக்கும் கடையில் வாங்கி போடவும். அதன் விலை வெறும் 5 ரூபாய் மட்டுமே.
குக்கரில் தண்ணீர் லீக் ஆகாது;
குக்கர் விசிலில் புது போல்டை மாற்றிய பிறகு குக்கரில் விசில் இனி சரியாக வேலை செய்யும். அதுமட்டுமின்றி, குக்கரிலிருந்து தண்ணீரும் வெளியேறாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

