- Home
- Lifestyle
- பழங்களை சாப்பிட சரியான நேரம் தெரியுமா? மத்த நேரம் சாப்பிட்டால் முழுச்சத்துக்கள் கிடைக்காதாம்
பழங்களை சாப்பிட சரியான நேரம் தெரியுமா? மத்த நேரம் சாப்பிட்டால் முழுச்சத்துக்கள் கிடைக்காதாம்
பழங்களின் முழு சத்துக்களையும் பெற அதை சாப்பிட சரியான நேரம் எது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பழங்களை தினமும் சாப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் நிறைந்துள்ளதால் அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலில் நீரேற்றுடன் வைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பழங்களை சாப்பிடுவதற்குகென சில குறிப்பிட்ட நேரம் உள்ளன. அந்த நேரத்தில் பழங்களை சாப்பிடால் மட்டுமே அதிலிருக்கும் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெறலாம். அது எந்த நேரம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பழங்களை சாப்பிட சரியான நேரம் எது? : பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற அதை வெறும் வயிற்றில் காலையில் தான் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அந்த நேரத்தில் தான் செரிமான மண்டலம் வேகமாக செயல்படுமாம். அது மட்டுமில்லாமல் என்சைமையும் வலிமையாக மாறுமாம்.
வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் அது வேகமாக உடைந்து அதன் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதற்கு வழிவகை செய்யும். இதன் விளைவாக உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் நாள் முழுவதும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். எனவே உங்களது நாளை ஆரோக்கியத்துடன் தொடங்க பழங்களே சிறந்த உணவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உணவுக்கு பிறகு பழங்கள் சாப்பிடலாமா? : உணவுக்கு பிறகு பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அவ்வாறு சாப்பிட்டால் வயிற்று மந்தம், செரிமான பிரச்சனை, புளித்த தன்மை போன்ற பிரச்சனைகள் உருவாகும் என்கின்றனர். குறிப்பாக புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிட்ட பிறகு பழங்களை ஒருபோதும் சாப்பிடவே கூடாது.
பழங்களை சாப்பிடுவதற்கான சரியான முறை : பழங்களை சாப்பிடுவதற்கு என்ன சில முறைகள் உள்ளன. அதாவது வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையெனில் உணவு சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது உணவு சாப்பிட்ட பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து பழங்களை சாப்பிடலாம். இப்படி பழங்களை சாப்பிட்டால் மட்டுமே செரிமான பிரச்சனை வராது. சீராகவும் இருக்கும்.