ஆவணி அவிட்டம் என்றாம் என்ன? துன்பம் விலகி வீட்டில் ஆனந்தம் பொங்க வைக்கும் வழிபாடு!!
ஆவணி அவிட்டம் வழிபாடு ஆண்களால் மட்டுமே, வழிபடும் ஒரு நிகழ்வாகும். இதனை எப்படி செய்வது, ஆவணி அவிட்டம் பலன்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
ஆவணி அவிட்டம் என்பது பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகம் கடை பிடித்து வரும் ஒரு சடங்காகும். இந்த நாளில் உபநயனம், அதாவது, ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் ஆண்களால் கடைபிடிக்கப்படும் ஒரு வழிபாடு.
ரிக், யசுர்வேதங்கள் படிப்பவர்கள் இந்த நாளில் தங்களுடைய பூ நூலை மாற்றிக் கொள்வது வழக்கம். சாம வேதங்கள் படிப்பவர்கள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் பூ நூல் மாற்றி கொள்வார்கள்.
மேலும் செய்திகள்: பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர் விஷாலுக்கு பிரபல சீரியல் ஹீரோயினுடன் காதல் தோல்வி? தீயாய் பரவும் தகவல்!
பொதுவாக கூட்டு வழிபாடாக கொண்டாடப்படும் இந்நாளில், ஆண்கள் ஆற்றங்கரையிலோ அல்லது குளக்கரையிலோ குளித்து விட்டு தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.
சமஸ்கிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் என்பதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கூறுவார்கள். ஆவணி அவிட்டம் விரதம் எடுப்பதால், பூணூல் அணிந்து கொள்வதாலும் எவ்வித துன்பமும் அவர்களது குடும்பத்தை நெருங்காது என்பது ஐதீகம். எதிரிகள் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் மேலோங்கும் என முன்னோர்கள் கூறுவார்கள்.
மேலும் செய்திகள்: திடீர் என நடந்த 90'ஸ் நாயகிகள் கெட் டூ கெதர் பார்ட்டி... சிங்கிளாக கலந்து கொண்டு ஜமாய்த்த பிரபல நடிகர்! போட்டோ