MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 'இந்த' மோசமான அறிகுறிகள் உங்ககிட்ட இருக்கா? அப்ப நீங்க இந்த தப்பு செய்றீங்க!!

'இந்த' மோசமான அறிகுறிகள் உங்ககிட்ட இருக்கா? அப்ப நீங்க இந்த தப்பு செய்றீங்க!!

Sugar Overdose Symptoms : நாம் சர்க்கரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நம்முடைய உடலில் சில அறிகுறிகள் ஏற்படும். அது என்ன மாதிரியான அறிகுறிகள் என்று இப்போது பார்க்கலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 10 2024, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Side Effects Of Eating Too Much Sugar In Tamil

Side Effects Of Eating Too Much Sugar In Tamil

நம்மில் பலரும் விரும்பி சாப்பிடுவது இனிப்பு தான். சந்தோஷமாக இருந்தாலோ அல்லது துக்கமாக இருந்தாலோ பலர் உடனே வாங்கி சாப்பிட விரும்புவது இனிப்புகளையே. நாம் விரும்பி சாப்பிடும் சாக்லேட் முதல் குறிக்கும் பானங்கள் வரை என அனைத்திலும் சர்க்கரைகள் நிறைந்துள்ளன. 

ஆனால் இப்படி அளவுக்கு சர்க்கரை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். அதிகப்படியான சர்க்கரை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பல் சொத்தை ஏற்படும் போன்ற பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. இப்போது அதிக சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Side Effects Of Eating Too Much Sugar In Tamil

Side Effects Of Eating Too Much Sugar In Tamil

அதிக சர்க்கரை சாப்பிடுவதால் வரும் பிரச்சினைகள் :

அளவுக்கு அதிகமாக சர்க்கரையை எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து இதனால் இதயம், எலும்புகள், தசைகள், சருமம், முடி போன்றவை நேரடியாக பாதிக்கப்படுகிறது. இது தவிர, மூளை உட்பட்ட பிற உடல் பாகங்களும் சேதமடைகின்றது. அந்தவகையில், நாம் சர்க்கரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நம்முடைய உடலில் சில அறிகுறிகள் ஏற்படும். அது என்ன மாதிரியான அறிகுறிகள் என்று இப்போது பார்க்கலாம். 

உடலில் ஆற்றல் குறையும்

நாம் அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக் கொள்ளும் போது நம்முடைய உடலில் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இதனால் உடல் திடீரென செயலிழக்கும். மேலும் நம்முடைய மனநிலை மற்றும் உற்பத்தி திறன் மோசமாக பாதிக்கப்படும்.

மனநிலை பாதிக்கப்படும்

அதிகப்படியான சர்க்கரை மனநிலையை பாதிக்கும். இதனால் உடல் ஆரோக்கியமானது விரைவாகவே பாதிப்படுகிறது. மேலும் உடலில் சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்படுவதால் எரிச்சல், பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. 

35
Side Effects Of Eating Too Much Sugar In Tamil

Side Effects Of Eating Too Much Sugar In Tamil

முகம் வீங்குதல்

உங்களது முகம் வீங்கி இருந்தால், உங்களது உடலில் அதிகப்படியான சர்க்கரை இருப்பதற்கான அறிகுறியாகும். எப்படியெனில் சர்க்கரையானது தண்ணீரை தக்க வைக்கும். இதனால் தான் முகம் வீங்கி காணப்படும்.

காலை வீக்கம்

காலை எழுந்தவுடன் உங்களது கை கால் முழுவதும் வீங்கி இருப்பதை நீங்கள் பார்த்தால் அதற்கு அதிகப்படியான இனிப்பு சாப்பிடுவது தான். இது தவிர அதிகப்படியான சர்க்கரையால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

45
Side Effects Of Eating Too Much Sugar In Tamil

Side Effects Of Eating Too Much Sugar In Tamil

தூங்குவதில் பிரச்சனை

நீங்கள் அளவுக்கு அதிகமாக இனிப்புகளை உட்கொண்டால் நீங்கள் இரவில் தூங்குவது சிரமம் ஏற்படும். எவ்வளவு சீக்கிரம் இரவில் படுக்கைக்கு தூங்க சென்றாலும் கூட தூக்கம் வரவே வராது. ரொம்பவே கஷ்டப்பட்டு தான் தூங்க வேண்டியிருக்கும். ஏனெனில் அதிகப்படியான சர்க்கரை தூக்கத்தை பாதிக்கும்.

எடை அதிகரிக்கும்

அதிகப்படியான சர்க்கரையால் உடல் எடையானது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதை பலரும் அறிந்ததே. சுத்திகரிக்கப்பட்ட இனிப்புகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பேரிச்சம் பழம் திராட்சை பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க: பிரவுன் சுகர், தேன், வெல்லம் - இவை சர்க்கரைக்கு சிறந்த மாற்றா? கட்டுக்கதைகளை உடைத்த உணவியல் நிபுணர்..

55
Side Effects Of Eating Too Much Sugar In Tamil

Side Effects Of Eating Too Much Sugar In Tamil

விரைவிலேயே முதுமை மற்றும் அதிகப்படியான முகப்பரு 

அதிகப்படியான சர்க்கரை சாப்பிடுவதினால் சீக்கிரமாகவே முதுமை முகத்தில் தெரியும். மேலும் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் தடுப்புகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான முகப்பருவுக்கு வழிவகுக்கும்.

இனிப்பு வேண்டுமென்ற எண்ணம்

அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு, என்ன உணவு சாப்பிட்டாலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இப்படி உணவு சாப்பிட்ட பிறகு சர்க்கரை சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவானது அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  உங்க வயசுக்கு தினமும் எவ்வளவு 'சர்க்கரை' எடுத்துக்கனும் தெரியுமா? 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(7.2 ov)71/1
INDIND
(20.0 ov)191/8
NZ need 121 runs in 76 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Recommended image2
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved