- Home
- Lifestyle
- தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Diwali Gift Ideas For Women: தீபாவளி பண்டிகையில் புதிய பொருட்கள் வாங்குவது மிகவும் விசேஷமானது. உங்கள் வீட்டில் அம்மா, மனைவி, அக்கா, தங்கை அல்லது மகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த கிப்ட் ஐடியாக்கள் இதோ.

Diwali Gift Ideas For Women
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது என மக்கள் பிசியாகி விட்டனர். தீபாவளியையொட்டி நிறுவனங்கள் போனஸ் வழங்குவதால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தீபாவளிக்கு புதிய பொருட்கள் வாங்கினால் நல்லது என ஐதீகம் சொல்வதால் மக்கள் தங்கம், வெள்ளி, பித்தளை அல்லது எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்குவது வழக்கம்.
இதுபோக, வீட்டுக்குத் தேவையான மின்சாதனப் பொருட்கள் அல்லது வாகனங்கள் கூட வாங்கலாம். உங்களது வீட்டு மகாலட்சுமியான அம்மா, மனைவி, சகோதரி அல்லது மகளுக்குத் தீபாவளிக்கு சிறப்புப் பரிசு வழங்க நினைத்தால், கீழே உள்ள இந்த பரிசுப்பொருட்களை பாருங்கள்.
1. தங்கம் அல்லது வெள்ளி நகைகள்
உங்கள் அம்மா, மனைவி அல்லது சகோதரிக்குத் தீபாவளிப் பரிசாகத் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை நீங்கள் வழங்கலாம். மூக்குத்தி, சிறிய கம்மல் அல்லது நெக்லஸ் என்று பல விருப்பங்கள் உள்ளன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அழகான நகையைத் தேர்ந்தெடுத்து பரிசாக அளிக்கலாம்.
2. அழகான பாத்திரங்களை பரிசளியுங்கள்
தீபாவளி நேரத்தில் வெள்ளி, செம்பு அல்லது பித்தளை பாத்திரங்களை நீங்கள் வாங்கலாம். இந்நாளில் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாத்திரங்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது என்று நம்பப்படுகிறது. அதேபோல, காய் நறுக்கப் பயன்படும் கத்தி அல்லது அது போன்ற பொருட்களை வாங்கக் கூடாது. அதற்குப் பதிலாக கிண்ணம், தட்டு, டம்ளர் அல்லது ஸ்பூன் போன்ற பாத்திரங்களை வாங்கிப் பரிசாக வழங்கலாம்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள்
தீபாவளி மின்னணுப் பொருட்கள் மற்றும் சாதனங்களை வாங்குவதும் ஒரு சிறந்த தேர்வாகும். குளிர்சாதனப் பிரிட்ஜ், டிவி, ஸ்மார்ட்போன், மிக்சி என்று வீட்டில் தினமும் பயன்படும் பொருட்களை நீங்கள் வாங்கலாம். இது உங்கள் வீட்டுப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பரிசாக இருக்கும்.
4. தங்கம் அல்லது வெள்ளி கீ செயின்
உங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட கீ செயின்களை நீங்கள் பரிசாக வழங்கலாம். வீட்டுச் சாவி அல்லது லாக்கர் சாவிகளை இது போன்ற அழகான கீ செயினில் மாட்டி வைக்கலாம். இது சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகான, பயனுள்ள பரிசாக இருக்கும்.
5. பட்டுப்புடவைகள் மற்றும் பாரம்பரிய ஆடைகள்
தீபாவளி என்றாலே புத்தாடை தான் முதன்மையானது. உங்கள் அம்மா, மனைவி அல்லது சகோதரிகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப காஞ்சிபுரம் பட்டு, மென் பட்டு (Soft Silk) அல்லது டிசைனர் புடவைகள் மற்றும் சுடிதார்களை பரிசளிக்கலாம்.
6. சாமி சிலை அல்லது வெள்ளி நாணயம்
தீபாவளிக்கு தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட சாமி சிலைகளை நீங்கள் வாங்கலாம். இவற்றை வீட்டுப் பூஜை அறையில் வைக்கலாம். அதுமட்டுமில்லாமல், தீபாவளி பூஜை நேரத்தில் பயன்படுத்தும் வெள்ளி நாணயங்களைக் கூட நீங்கள் வாங்கலாம். இது போன்ற பரிசுகள் பண்டிகையின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.





