வீணாகும் இட்லி மாவில் வெறும் 10 நிமிடத்தில் வீட்டை க்ளீன் பண்ணலாம்!! சூப்பர் டிப்ஸ்
இட்லி மாவு ரொம்பவே புளித்து விட்டால் அதை வீணாக்காமல் முழு வீட்டையும் சுத்தம் பண்ண பயன்படுத்தலாம் தெரியுமா? அது எப்படி என்று இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.

புளித்த இட்லி மாவில் சுத்தம் செய்யும் குறிப்புகள்
பொதுவாகவே நம் எல்லோருடைய வீட்டிலும் இட்லி, தோசை மாவு அரைத்து வைத்திருப்போம். ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினாலும் அதிகபட்சமாக 3 நாட்களிலே புளித்து விடும். இதனால் பலர் புளித்த மாவை பயன்படுத்தாமல் தூக்கி எறிந்துவிடுவார்கள். ஏனெனில் புளித்த மாவில் இட்லி அல்லது தோசை சுட்டு சாப்பிட்டால் வயிற்று வலி, அசிடிட்டி, அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், நீங்களும் புளித்த இட்லி மாவை கீழே கொட்டுகிறீர்களா? இனிமேல் அப்படி செய்யாதீங்க. ஒரு கப் புளித்த இட்லி மாவை வைத்து முழு வீட்டையும் சுத்தம் செய்யலாம் தெரியுமா? அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
பாத்ரூம் பக்கெட்டில் உள்ள அழுக்குகளை போக்கலாம் :
பாத்ரூம் மில் பயன்படுத்தும் பக்கெட்டுகளில் நிறைய கறைகள், அழுக்குகள் படிந்து இருக்கும். தினமும் அதை பயன்படுத்துவதால் அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் வழுவழுப்பாக இருக்கும். உப்பு தண்ணீர் கறைகளும் அதில் இருக்கும். எனவே அதை சுத்தம் செய்வதற்கு புளித்த இட்லி மாவை பயன்படுத்தலாம். இதற்கு இட்லி மாவை பக்கெட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பூசவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து பிரஷால் நன்கு தேய்த்தால் பக்கெட்டில் படிந்திருக்கும் விடாப்படியான கறைகள், அழுக்குகள் மற்றும் உப்புத்தண்ணீர் கறை அனைத்தும் நீங்கிவிடும். பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு கழுவுங்கள். இப்போது பக்கெட் பார்ப்பதற்கு புத்தம் புதுசாக இருக்கும்.
கிச்சன் சிங்கை சுத்தம் செய்யலாம் :
கிச்சன் சிங்க் எப்போதுமே ஈரப்பதமாகவும், பிசுபிசுப்பாகவும், லேசான துர்நாற்றமும் அடிக்கும். மீந்து போன இட்லி மாவை கொண்டு இதை சரி செய்து விடலாம். இதற்கு சிங்கில் பாத்திரங்கள் ஏதும் வைக்காமல் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக்கிவிட்டு, சுமார் 5 ஸ்பூன் அளவுக்கு புளித்த இட்லி மாவை சிங்க் முழுவதும் தடவி விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப்பர் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு சோப்பு நீர் கொண்டு தேய்த்து கழுவி விடுங்கள். இப்போது கிச்சன் சிங்க் புத்தம் புதியது போல் இருக்கும் மற்றும் துர்நாற்றமும் அடிக்காது, நல்ல வாசனை வரும். வாரத்தில் ஒரு முறை இப்படி நீங்கள் கிச்சன் சிங்கை சுத்தம் செய்யலாம்.
தண்ணீர் குழாயை சுத்தம் செய்யலாம் :
தண்ணீர் குழையை எவ்வளவுதான் தேய்த்து சுத்தம் செய்தாலும் அதில் படித்திருக்கும் விடாப்பிடியான கறை மற்றும் துரு அப்படியே இருக்கும். இதை சுத்தம் செய்வதற்கு புளித்த இட்லி மாவை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் புளித்த இட்லி மாவில் 4 ஸ்பூன் தண்ணீர் மற்றும் சிறிதளவு பாத்திரம் கழுவும் லிக்விட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவை ஒரு ஸ்கிரப் உதவியுடன் குழாய் மீது நன்கு தெரிவிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழிவினால் குழாய் புத்தம் புதுசு போல பளபளக்கும்.
வீட்டின் தரையை துடைக்கலாம் :
வீட்டின் தரையைத் துடைக்க பலவிதமான ஃப்ளோர் கிளீனர்கள் கடைகளில் விற்பனையாகின்றன. ஆனால் பணம் ஏதும் செலவழிக்காமல் மீண்டும் போன இட்லி மாவை கொண்டு வீட்டின் தடையை சுத்தம் செய்து விடலாம். இதற்கு அரை பக்கெட் தண்ணீரில் 4 ஸ்பூன் புளித்த இட்லி மாவு மற்றும் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 ஸ்பூன் ஷாம்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இதை கொண்டு தரையை துடைத்தால் தரையில் இருக்கும் மொத்த அழுக்கும் நீங்கு தரை பளிச்சென்று இருக்கும். வீடும் நல்ல வாசனையாக இருக்கும்.