இட்லி மாவு புளிச்சு போச்சா? இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க இட்லி டேஸ்ட்டா இருக்கும்!
Sour Idli Batter : புளித்த இட்லி மாவில் இட்லி சாப்பிட முடியாது, சுவையை கெடுத்து விடும். எனவே, இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால் புளித்த மாவை டேஸ்டாக மாற்றலாம்.
இட்லி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். பெரும்பாலான வீடுகளில் காலை இரவு உணவாக இட்லி தான் இருக்கும். இட்லியுடன் தேங்காய் சட்னி சாம்பார் இட்லி பொடி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ஆனால், சில சமயங்களில் இட்லி மாவு புளித்து விடுவதால் மாவில் இட்லி செய்தாலும் சுவையாக இருக்காது. இதனால் பலர் மாவை குப்பையில் கொட்டுகிறார்கள். ஆனால் இந்த சிம்பிளான டிக்கை பின்பற்றினால் புளித்த மாவை சுவையாக மாற்றலாம் தெரியுமா?
இட்லி தோசை மாவு புளித்திருந்தால் அதில் சிறிதளவு இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும். இல்லையெனில், அவற்றை நறுக்கயும் போடலாம்.
இதையும் படிங்க: உங்க வீட்ல இட்லி மாவு இருக்குதா..? அப்போ ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு போண்டா செஞ்சு குட்டீஸ்களுக்கு கொடுங்க..
அதுபோல இட்லி, தோசை மாவு ரொம்ப புளித்திருந்தால் நீங்கள் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கலாம். ஏனெனில், அவை அமிலத்தன்மையைக் குறைக்கும். மேலும் சுவையையும் அதிகரிக்கும். ஆனால், அவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. இல்லையெனில், சுவையைக் கெடுத்து விடும்.
புளித்த இட்லி மாவில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்தால், சாப்பிடுவதற்கு சற்று வித்தியாசமான சுவையில் நன்றாகவும் இருக்கும். மேலும் இட்லி மென்மையாகவும் வரும்.
இதையும் படிங்க: மீந்துபோன இட்லியில் ஒரு முறை இப்படி டிபன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!
நீங்கள் மாவு அரைக்கும் போது அதில் சாதாரண நீருக்கு பதிலாக குளிர்ந்து நீர் பயன்படுத்தினால், இட்லி மாவு சீக்கிரம் கெடாமல் இருக்கும்.