Eggshells : முட்டை ஓட்டை இனி தூக்கி போடாதீங்க! இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
முட்டை ஓடுகளை இனி தூக்கி போடாமல் அதை பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். அது என்னென்ன என்று இங்கு காணலாம்.

முட்டை ஓட்டை பயன்படுத்தும் வழிகள்
தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும், அது ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது என்று நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. பொதுவாக முட்டை சாப்பிட பிறகு அதன் ஓட்டை குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் முட்டை மற்றும் அதன் மஞ்சள் கருவில் இருக்கும் சத்துக்கள் முட்டை ஓட்டிலும் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. ஆம், பல புரோட்டின் பவுடர் தயாரிப்பில் முட்டை ஒட்டு பொடியும் பயன்படுத்துகிறார்கள். மேலும் இதில் கால்சியமும் நிறைந்திருக்கிறது. சரி இப்போது முட்டை ஓட்டை என்னென்ன விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிச்சனில் டிப்ஸ் :
- முட்டை ஓடுகளை பொடியாக்கி அதை குக்கர் மற்றும் பிற பாத்திரங்களில் இருக்கும் கறைகளை போக்க பயன்படுத்தலாம். இதற்கு முட்டை ஓட்டின் பொடியில் வினிகர் கலந்து அதை, அந்த கலவையை கொண்டு பாத்திரங்களை சுத்தம் செய்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.
- முட்டை ஓட்டின் பொடியை வைத்து காபி வடிகட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இது அதில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்க உதவும்.
- கிச்சன் சிங்கில் உள்ள அடைப்பை போக்க முட்டையின் ஓட்டை பொடி ஆக்கி இரவு தூங்கும் முன் தூவி பிறகு அதில் சிறிதளவு வினிகரை ஊற்றுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
கால்சியம் சப்ளிமென்ட் :
முட்டை ஓட்டை கால்சியம் சப்ளிமெண்டாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் முட்டை ஓட்டியில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் இது பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே மூட்டை ஓட்டின் பொடியை சூப் மற்றும் சாஸ் போன்ற உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பியூட்டி டிப்ஸ் :
- முட்டை ஓட்டின் பொடியை ஃபேஸ் மாஸ்க் போல பயன்படுத்தினால் சரும மென்மையாகவும், பொலிவாகவும் மாறும். இதற்கு முட்டை ஓட்டியின் பொடியுடன் சிறிதளவு தேன் மற்றும் தயிர் சேர்ந்து ஃபேஸ் மாஸ்காக போடலாம்.
- முட்டை ஓட்டின் பொடி சருமத்தின் எரிச்சல் மற்றும் பல சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. குறிப்பாக பிக்மன்டேஷனை குறைக்க உதவும்.
செடிகளுக்கு உரமாக :
முட்டை ஓட்டை பொடியாக்கி அதை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். முட்டை ஓட்டில் இருக்கும் கால்சியம் செடிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இதற்கு முட்டை ஓட்டை பொடியாக்கி அதை செடிகளின் வேர் பகுதியில் போடுங்கள்.
பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம் :
- முட்டை ஓடுகளை பூச்சிக்கொல்லியாக கூட பயன்படுத்தலாம். இதற்கு முட்டை ஓடுகளை நன்றாக நசுக்கி அதை செடிகளின் இலைகள் மீது தூவ வேண்டும்.
- அதுமட்டுமின்றி செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க செடிகளை சுற்றி முட்டை ஓட்டின் பொடியை தூவினால் செடிகளில் பூச்சிகள் வராது மற்றும் செடியும் நன்றாக வளரும்.
முக்கிய குறிப்பு :
முட்டை ஓட்டை பயன்படுத்துவதற்கு முன்பாக அதை நன்கு தண்ணீரில் கழுவி வெயிலில் காய வைத்து பிறகு பொடி செய்துதான் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக முட்டை ஓட்டை உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.