Kitchen Tips : காய்ந்த எலுமிச்சை பழத்திற்கு இப்படி ஒரு சிறப்பா? இனி தூக்கி போடாதீங்க..
காய்ந்த எலுமிச்சை பழங்களை குப்பையில் போடுவதற்கு பதிலாக, அதை பல வழிகளில் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Dried Lemon for Cleaning
பொதுவாக வீட்டில் வாங்கி வைத்து எலுமிச்சை பழங்கள் காய்ந்து போனால் அதை குப்பையில் நாம் போட்டு விடுவோம். ஆனால் அப்படி செய்யாமல் அதை சுத்தம் செய்வதற்கு பல வழிகளில் பயன்படுத்தலாம் தெரியுமா? அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கிச்சன் சிங்க் கழுவ
இதற்கு காய்ந்து போன எலும்பிச்சை பழத்தை ரெண்டு துண்டாக நறுக்கி அதைக்கொண்டு கிச்சன் சிங்கை சுத்தம் செய்யுங்கள். இதனால் கிச்சன் சிங்கில் பாக்டீரியாக்கள் அழிந்து போகும். பூச்சிகள் தொல்லை இருக்காது. மேலும் துர்நாற்றம் வீசுவதற்கு பதிலாக நறுமண வீசும். காய்கறி நறுக்கும் பலகையையும் சுத்தம் செய்வதற்கு காய்ந்துபோன எலுமிச்சையை பயன்படுத்தலாம்.
பிரிட்ஜ் துர்நாற்றம் நீங்க
எலுமிச்சை பழம் காய்ந்து போனாலும் அதன் வாசனை நீங்காமல் அப்படியே இருக்கும். எனவே காய்ந்த எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து, அந்த கலவையை உங்கள் வீட்டின் பிரிட்ஜ், ஷூ ரேக் போன்ற துர்நாற்றம் அடிக்கும் இடங்களில் வைத்தால் நல்ல வாசனை வரும்.
பாத்திரங்கள் பளபளக்க
உங்கள் வீட்டு பழைய பித்தளை பாத்திரங்களை புதுசு போல மாற்ற காய்ந்த எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம். இதற்கு எலுமிச்சை பழத்திலிருந்து பித்தளை பாத்திரங்களை தேய்த்தால் பாத்திரம் பளபளக்கும். அது மட்டுமில்லாமல் இரும்பு, சில்வர் போன்ற பாத்திரங்களையும் பளபளக்க செய்ய காய்ந்த எலுமிச்சை பழத்தை யூஸ் பண்ணலாம்.
மைக்ரோவேவ் சுத்தம் செய்ய
உங்கள் வீட்டில் அவ்வப்போது பயன்படுத்தும் கெட்டில், மைக்ரோவேவ் இயற்பெயர் கிளீனிங் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கு காய்ந்த எலுமிச்சை பழத்திலிருந்து சாற்றை எடுத்து சுத்தம் செய்தால் துர்நாற்றம் வீசாது சுத்தமாக இருக்கும் மற்றும் நல்ல மணம் வீசும்.