Rat Remedies : எலியை கொல்லாமல் வீட்டை விட்டு விரட்டும் தந்திரம்!! ஒரே வாரத்தில் தீர்வு
உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தால் அதை கொல்லாமல் வீட்டிலிருந்து சுலபமாக விரட்ட சூப்பரான சில டிப்ஸ்கள் இங்கே.

Rat Remedies
வீட்டில் ஏற்கனவே இருக்கும் பிரச்சனை போதாதுன்னு எலி பிரச்சனையும் இருக்கிறதா? வீட்டில் எலி இருந்தால் நிறைய நோய்கள் வேகமாக பரவும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதுவும் குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் பொருட்களை எலி கடிக்க வாய்ப்புள்ளது. மேலும் எலி கடித்தால் மரணம் கூட நிகழும். எனவே வீட்டிலிருந்து எலியை விரட்டுவது ரொம்பவெ முக்கியம்.
எலியை விரட்ட என்னதான் எலி மருந்து, எலிப்பொறி என வாங்கி வைத்தாலும் அது நமக்கே டிம்மிக்கு கொடுத்து ஓடிவிடும். ஆனால் எலிக்கு பிடிக்காத சில பொருட்களை வீட்டில் வைத்தால் எலி வீட்டில் இருந்து ஓடிவிடும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
பூண்டு :
பூண்டிலிருந்து வரும் கடுமையான வாசனை எலிகளுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆகையால் எலிகள் வரும் இடங்களில் பூண்டை நசுக்கி வைக்கவும்.
புதினா எண்ணெய்
புதினாவிலிருந்து வரும் வாசனை எலிகளுக்கு பிடிக்காது. எனவே ஒரு துண்டு பஞ்சை புதினா எண்ணெய்யில் நனைத்து அதை எலிகள் அடிக்கடி வரும் இடங்களில் வைத்தால், எலிகள் வீட்டிற்குள் வரவே வராது ஓடிவிடும். அதுபோல அந்த பஞ்சு உருண்டையை எலிகள் இருக்கும் இடத்திலும் வைக்கலாம்.
சிவப்பு மிளகாய் பொடி :
சிவப்பு மிளகாய் பொடியில் இருந்து வரும் கடுமையான வாசனை எலிகளை விரட்டியடிக்க உதவுகிறது. எனவே எலிகள் அடிக்கடி வரும் இடங்களில் சிவப்பு மிளகாய் பொடியை தூவி விடுங்கள்.
படிகாரம் :
எலிகளுக்கு படிகாரத்தில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே எலிகளை விரட்ட படிகாரத்தை பொடியாக்கி அதை எலிகள் வரும் பாதைகளில் தூவி விடுங்கள்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

