- Home
- Lifestyle
- Vitamin b12: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்...'வைட்டமின் பி12' நிறைந்த 3 சூப்பர் உணவுகள்..
Vitamin b12: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்...'வைட்டமின் பி12' நிறைந்த 3 சூப்பர் உணவுகள்..
Vitamin b12 Food: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் பி 12. இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.

உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கு மூளை, அடிப்படையாக விளங்குகிறது. எனவே மூளை ஆரோக்கியமாக செயல்பட, சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் அவசியம். அந்த வரிசையில், வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த சோகை இருக்காது. மேலும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வைட்டமின் பி12 உணவை எடுத்து கொள்வது நினைவாற்றல் செறிவு மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். எனவே, குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் திறனை மேம்படுத்த அதிக சத்தான வைட்டமின் பி12 கொண்ட உணவுகளை அவர்களுக்கு கொடுப்பது மிகவும் முக்கியம்.
Health Tips-
வைட்டமின் பி 12 நன்மைகள்:
வைட்டமின் பி12, பல உடல் செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது, இதில் சிவப்பு ரத்த செல்களை உருவாக்குதல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாத்தல், டிஎன்ஏ உருவாக்கம், உடலுக்கு ஆற்றல் அளித்தல் மற்றும் பல செயல்பாடுகளும் உள்ளடங்கும். ஒரு வேளை, உங்கள் உணவில் போதுமான வைட்டமின்கள் கிடைக்கவில்லை என்றால், அது ரத்தசோகை நாவின் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம், வாய் புண்கள், எரிச்சல், மனச்சோர்வு மற்றும் கடுமையான சோர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
Vitamin b12 Food:
வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்
வைட்டமின் B12 குறைபாடு இருந்தால், அது பல உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தும்.எனவே, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் பி12 இருக்க வேண்டியது அவசியம். ஒரு நபர் குறைந்தபட்சம் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பால் மற்றும் தயிர்:
பால் மற்றும் தயிரில், வைட்டமின் பி 12 அதிகளவு உள்ளது. தயிர் உட்கொள்ளல் வைட்டமின் பி12 அளவை மேம்படுத்தவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். ஒரு கப் சாதாரண தயிரில், 28 சதவீதம் அளவிற்கு வைட்டமின் பி 12 உள்ளது. இது சைவ பிரியர்களுக்கு முக்கியமான ஒன்றாகும்.
Vitamin b12 Food:
நண்டுகள்:
நண்டுகளில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருப்பதால், இவற்றை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். நண்டின் இறைச்சியில் ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம், இவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும், இதய நலனுக்கும் ஏற்றவை. மேலும் நண்டில், கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
மீன்:
மீன்களில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. சால்மன் சார்டைன்கல், டூனா மற்றும் டிரவுட் மீன் இயற்கையாகவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தில் நிறைந்துள்ளது. இது இதயம், எலும்புகள், மூளை மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது.
Vitamin b12 Food:
முட்டை:
முட்டையின் மஞ்சள் கருக்களில் வெள்ளை பகுதியை விடவும் அதிக வைட்டமின் பி12 இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும். புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் முட்டை ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.
எனவே, நம்முடைய தினசரி உணவில் இறைச்சி, மீன், கோழி, முட்டை, நண்டு மற்றும் பால் போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சைவ உணவு இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சைவ உணவு பிரியர்கள் பால், தயிர், பன்னீர் அல்லது சீஸ் சாப்பிடலாம். இதன் மூலம், உங்களுக்கு இயற்கையாகவே வைட்டமின் பி 12 கிடைக்கும்.