- Home
- Lifestyle
- Induction Stove Safety: மழைக்காலம் வந்தாச்சு.. இன்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்துகிறீர்களா? சின்ன தப்பு உயிருக்கே ஆபத்தாகலாம்! உஷார்!
Induction Stove Safety: மழைக்காலம் வந்தாச்சு.. இன்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்துகிறீர்களா? சின்ன தப்பு உயிருக்கே ஆபத்தாகலாம்! உஷார்!
Induction Stove: சிலிண்டர் விலை அதிகரிப்பால் இன்டக்ஷன் ஸ்டவ் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், மழைக்காலத்தில் இன்டக்ஷன் பயன்படுத்தும்போது கவனமாக இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

இன்டக்ஷன் ஸ்டவ்
இன்டக்ஷன் ஸ்டவ் என்பது இன்றைய காலக்கட்டத்தில் சமையலறைகளில் மிக முக்கியமான ஒரு சாதனமாக மாறிவிட்டது. கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு போன்ற சமயங்களில் இது ஒரு சிறந்த மாற்றாக விளங்குகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் இன்டக்ஷன் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
மழைக்காலத்தில் இன்டக்ஷன் பயன்படுத்தும்போது எச்சரிக்கை
அதாவது இன்டக்ஷன் ஸ்டவ் முழுவதுமாக மின்சாரத்தில் இயங்குகிறது. மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், மின் கசிவு ஆபத்து அதிகரிக்கிறது. வயரிங் சேதமடைந்திருந்தாலோ, பிளக் சரியாக இல்லாவிட்டாலோ ஷாக் அடிக்க வாய்ப்புள்ளது. எனவே, பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டவ் பாதுகாப்பாக உள்ளதா என சோதிப்பது ரொம்ப முக்கியம்.
வயரிங் மற்றும் பிளக் சரி பார்க்க வேண்டும்
இன்டக்ஷனுடன் இணைக்கப்பட்ட வயர் டேமேஜ் ஆகி இருந்தாலும், பிளக் லூசாக இருந்தாலோ உடனடியாக அதை மாற்றிவிடுங்கள். இதுபோன்ற கோளாறுகளால் மின் கசிவு ஏற்பட்டு விபத்துகள் நடக்கலாம். எனவே, பழைய அல்லது சேதமடைந்த வயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
ஈரக் கையுடன் தொட வேண்டாம்
தண்ணீர் மின்சாரத்தை வேகமாக கடத்தும். அதனால், ஈரக் கையுடன் இன்டக்ஷனை ஆன் செய்வது, சூடான பாத்திரத்தைத் தொடுவது ஆபத்தானது. இன்டக்ஷனைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் கைகள் ஈரம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாத்திரங்களும் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
சரியான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
இன்டக்ஷனுக்கு ஏற்ற பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சரியாகப் பொருந்தாத அல்லது எளிதில் வழுக்கும் பாத்திரங்களைப் பயன்படுத்தினால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம். மேலும், இன்டக்ஷன் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, அதன் மீதுள்ள பாத்திரத்தை தேவையில்லாமல் தொடாதீர்கள். ஒருவேளை மின் கசிவு இருந்தால், ஷாக் அடிக்கும் அபாயம் உண்டு.
கரண்ட் ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்?
ஒருவருக்கு கரண்ட் ஷாக் அடித்தால், உடனடியாக மெயின் சுவிட்சை ஆஃப் செய்யுங்கள். பிறகு, காய்ந்த மரக்கட்டை அல்லது பிளாஸ்டிக் போன்ற மின்சாரத்தைக் கடத்தாத பொருளைக் கொண்டு, பாதிக்கப்பட்டவரை காப்பாற்றலாம். அவரை நேரடியாகக் கையால் தொடாதீர்கள். பாதிக்கப்பட்டவர் சுயநினைவை இழந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

