MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Nameless Station: 18 வருஷமா பெயரே இல்லாத இந்திய ரயில் நிலையம்! டிக்கெட் எப்படி எடுப்பாங்க தெரியுமா?

Nameless Station: 18 வருஷமா பெயரே இல்லாத இந்திய ரயில் நிலையம்! டிக்கெட் எப்படி எடுப்பாங்க தெரியுமா?

Nameless Station: இந்தியாவில் 18 ஆண்டுகளாக ஒரு ரயில் நிலையத்துக்கு பெயரே கிடையாது. இந்த ரயில் நிலையம் எங்கே இருக்கு? இங்கே போக டிக்கெட் எப்படி வாங்குவது? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 06 2026, 10:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெயர் இல்லாத ரயில் நிலையம்
Image Credit : Gemini AI

பெயர் இல்லாத ரயில் நிலையம்

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்று. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். பொதுவாக ரயில் நிலையங்களில் பெரிய மஞ்சள் போர்டில் ஊரின் பெயர் எழுதியிருப்பதைப் பார்ப்போம். ஆனால், இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்திற்கு கடந்த 18 ஆண்டுகளாக பெயரே இல்லை. அந்த ஸ்டேஷனில் உள்ள போர்டு காலியாகவே காட்சியளிக்கிறது. அந்த விசித்திரமான‌ ஸ்டேஷன் எங்கே இருக்கிறது, ஏன் அதற்கு பெயர் இல்லை என்ற சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

இதையும் படிங்க: ஒரே ஒரு ரயில் டிக்கெட்டில் இந்தியாவையே சுத்தலாம்! 56 நாள் டூர்! 40% பணம் மிச்சம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்த பெயர் இல்லாத ரயில் நிலையம் எங்கே இருக்கிறது?
Image Credit : Getty

இந்த பெயர் இல்லாத ரயில் நிலையம் எங்கே இருக்கிறது?

பெயரே இல்லாத இந்த ரயில் நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது. புர்த்வான் (பர்தமான்) மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'ரைனா' என்ற கிராமத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. ரயில்வே துறை, இப்பகுதி மக்களின் வசதிக்காக 2008-ல் ஒரு புதிய நிலையத்தைக் கட்டியது. ஆனால், அன்று முதல் இன்று வரை, அதிகாரிகளால் இந்த நிலையத்திற்கு ஒரு பெயரைக்கூட இறுதி செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க:ரயிலில் இந்த 3 'தப்பு' பண்ணா ரூ.2000 ஃபைன், ஜெயில்! பயணிகளே உஷார்!

35
இந்த ரயில் நிலையத்திற்கு ஏன் பெயர் இல்லை?
Image Credit : x

இந்த ரயில் நிலையத்திற்கு ஏன் பெயர் இல்லை?

இந்த ரயில் நிலையம் 'ரைனா' மற்றும் 'ரைனாகர்' என்ற இரண்டு அண்டை கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும், ரயில்வே அதிகாரிகள் தொடக்கத்தில் இதற்கு 'ரைனாகர்' என்று பெயரிட்டனர். அந்தப் பெயரை ஸ்டேஷன் போர்டிலும் எழுதினார்கள். 

இதனால் ரைனாகர் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பக்கத்து ஊரான ரைனா கிராம மக்கள், ரயில்வேயின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர். நிலையம் தங்கள் கிராமப் பகுதிக்குள்ளும் வருவதால், அதற்கு 'ரைனா' என்று பெயரிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இப்படி, இரண்டு கிராமங்களுக்கு இடையே ரயில் நிலையப் பெயருக்காக தகராறு முற்றியது.

இதையும் படிங்க: ரயிலில் லோயர் பெர்த் இனி ஈஸி! டிக்கெட் புக்கிங்கில் 'இந்த' ட்ரிக் யூஸ் பண்ணுங்க!

45
கோர்ட் வரை சென்ற கிராம மக்கள்..
Image Credit : gemini

கோர்ட் வரை சென்ற கிராம மக்கள்..

ரயில் நிலையப் பெயர் தொடர்பான தகராறு பெரிதானது. இரு தரப்பு மக்களும் போராட்டம் நடத்தியதால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. ரயில்வே உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் முன்பும் பெரிய அளவில் தர்ணாக்கள் நடந்தன. இந்த சண்டை அத்துடன் நிற்காமல், நீதிமன்றம் வரை சென்றது. சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் முயன்றும், இரு கிராம மக்களும் தங்கள் பிடிவாதத்தை விடவில்லை. இதனால் வெறுத்துப்போன ரயில்வே அதிகாரிகள், ஸ்டேஷன் போர்டில் இருந்த 'ரைனாகர்' என்ற பெயரை முற்றிலுமாக அழித்துவிட்டனர். அன்று முதல் இன்று வரை, அதாவது சுமார் 17 ஆண்டுகளாக, அந்த போர்டு காலியாகவே உள்ளது.
55
பெயர் இல்லாத ரயில் நிலையத்திற்கு டிக்கெட் எப்படி?
Image Credit : Gemini AI

பெயர் இல்லாத ரயில் நிலையத்திற்கு டிக்கெட் எப்படி?

போர்டில் பெயர் இல்லை என்றாலும், இந்த நிலையத்தில் ரயில்கள் நிற்பதற்கு எந்தத் தடையும் இல்லை. உள்ளூர் பயணிகள் ஒரு நாளைக்கு 6 முறை இந்த வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிக்கின்றனர். பயணிகள் வழக்கம் போல் இங்கே ஏறி இறங்குகிறார்கள். ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், போர்டு காலியாக இருந்தாலும், பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டில் 'ரைனாகர்' என்ற பெயர் அச்சிடப்பட்டிருக்கிறது. கிராம மக்களின் ஈகோ,  விசித்திரமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதற்கு இந்த பெயர் இல்லாத ரயில் நிலையமே ஒரு சிறந்த உதாரணம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி விதிகள்
தொடருந்து நிலையம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI Payments: டிஜிட்டல் உலகத்துல செலவை குறைப்பது எப்படி? இந்த ஈஸி டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image2
Road Markings: ரோட்டில் வெள்ளை, மஞ்சள் கோடுகள்! இதன் அர்த்தம் தெரியுமா?
Recommended image3
Parenting Tips: உங்க குழந்தைங்க முன்னாடியே அவங்க டீச்சரை குறை சொல்றீங்களா..?
Related Stories
Recommended image1
Indian Railways: ஒரே ஒரு ரயில் டிக்கெட்டில் இந்தியாவையே சுத்தலாம்! 56 நாள் டூர்! 40% பணம் மிச்சம்!
Recommended image2
Facts: ரயில் பெட்ஷீட் ஏன் வெள்ளையாக இருக்கு? பின்னணியில் அறிவியல்! மீம்ஸ் போடுறவங்க இத தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved