MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Indian Railways: ரயிலில் லோயர் பெர்த் இனி ஈஸி! டிக்கெட் புக்கிங்கில் 'இந்த' ட்ரிக் யூஸ் பண்ணுங்க!

Indian Railways: ரயிலில் லோயர் பெர்த் இனி ஈஸி! டிக்கெட் புக்கிங்கில் 'இந்த' ட்ரிக் யூஸ் பண்ணுங்க!

Indian Railways: ரயிலில் மூத்த குடிமக்கள் உள்பட பெரும்பாலான பயணிகள் 'லோயர் பெர்த்' எனப்படும் கீழ் படுக்கையை விரும்பினாலும், அது எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. ரயிலில் லோயர் பெர்த்தை எளிதாக எப்படி பெறுவது? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 05 2026, 06:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்
Image Credit : Gemini

மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்

ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் அனைவரும் அப்பர் பெர்த்தில் ஏறி இறங்குவதில் சிரமம் என்பதால் லோயர் பெர்த்களை விரும்புவார்கள். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக டிக்கெட் புக் செய்யும்போது, உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் என நினைப்பீர்கள். ஆனால், டிக்கெட் வந்ததும் மிடில் அல்லது அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைவீர்கள். 

இந்த வயதில் ஏறி இறங்குவது கடினம் என்பதால், பலரும் ரயில்வே நிர்வாகத்தைக் குறை சொல்வதுண்டு. ஆனால், சில சமயம் நீங்கள் செய்யும் ஒரு சின்னத் தப்பால்கூட லோயர் பெர்த் கிடைக்காமல் போகலாம். அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எந்த அடிப்படையில் லோயர் பெர்த் ஒதுக்கீடு
Image Credit : Getty

எந்த அடிப்படையில் லோயர் பெர்த் ஒதுக்கீடு

ரயில்வே அமைச்சகத்தின் தகவல் மற்றும் விளம்பரப் பிரிவின் நிர்வாக இயக்குநர் திலீப் குமார் இதுபற்றி விளக்கியுள்ளார். ரயில்களில் ஸ்லீப்பர் முதல் ஏசி வகுப்புகள் வரை, மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்) மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு லோயர் பெர்த்தில் ஒரு குறிப்பிட்ட கோட்டா உள்ளது. ரிசர்வேஷன் செய்யும்போது, இந்த அடிப்படையில் லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

இதையும் படிங்க: ஒரே ஒரு ரயில் டிக்கெட்டில் இந்தியாவையே சுத்தலாம்!: https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-circular-journey-ticket-guide-56-day-tour-money-savings-8yhqwcr

34
ஆப்ஷனை சரியாக தேர்வு செய்ய வேண்டும்
Image Credit : gemini and social media

ஆப்ஷனை சரியாக தேர்வு செய்ய வேண்டும்

மூத்த குடிமக்கள் டிக்கெட் புக் செய்யும்போது, அதற்கான ஆப்ஷனை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மிக முக்கியமாக, ஒரு PNR-ல் ஒன்று அல்லது இரண்டு மூத்த குடிமக்கள் பயணம் செய்தால் மட்டுமே லோயர் பெர்த் கோட்டா பொருந்தும். ஒருவேளை, ஒரே டிக்கெட்டில் இரண்டு, மூன்று அல்லது நான்கு மூத்த குடிமக்களுக்கு புக் செய்தால், இந்த கோட்டா உங்களுக்குப் பொருந்தாது. அப்போது உங்களுக்கு மிடில் அல்லது அப்பர் பெர்த் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரயிலில் காலி பெர்த்கள் இருக்கும்போது மட்டுமே மூத்த குடிமக்களுக்கான கோட்டா கிடைக்கும். அதாவது, நீங்கள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால், லோயர் பெர்த்கள் ஏற்கெனவே நிரம்பியிருக்கலாம். அதனால் உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்காது. ஒருவேளை பெர்த் காலியாக இருந்தால், சிஸ்டம் தானாகவே உங்களுக்கு லோயர் பெர்த்தை ஒதுக்கிவிடும்.

44
கோட்டாவில் ஒதுக்கப்படும் சீட்கள்
Image Credit : iSTOCK

கோட்டாவில் ஒதுக்கப்படும் சீட்கள்

மூத்த குடிமக்கள் கோட்டாவுடன், பெண்களுக்கான கோட்டாவும் இதில் அடங்கும். ஒரு ரயிலில் பெண்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்களுக்கான கோட்டாவில் பெர்த்கள் ஏற்கெனவே நிரம்பியிருந்தால், மூத்த குடிமக்களுக்கு இந்த வசதி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சில் 6 முதல் 7 லோயர் பெர்த்துகளும், தேர்ட் ஏசி-யில் 4 முதல் 5 லோயர் பெர்த்துகளும், செகண்ட் ஏசி-யில் 3 முதல் 4 லோயர் பெர்த்துகளும் கோட்டாவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கோட்டாவின் அடிப்படையில்தான் பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: ரயிலில் இந்த 3 'தப்பு' பண்ணா ரூ.2000 ஃபைன், ஜெயில்!: https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-avoid-these-3-mistakes-or-face-a-rs-2000-fine-and-jail-8bmbdmk

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
மூத்த குடிமக்கள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: OPS vs NPS விவகாரம்.! ஊழியர்கள் சொல்வது என்ன?
Recommended image2
Vegetable Price: காய்கறி வாங்கப் போறீங்களா? கோயம்பேடு சந்தையில் இன்று என்ன விலை தெரியுமா?
Recommended image3
Agriculture Crop Loan:பயிர் கடன் விவசாயிகளே.! இனி டென்ஷன் வேண்டாம்.! சூப்பர் செய்தியை சொன்ன தமிழக அரசு.!
Related Stories
Recommended image1
Facts: ரயில் பெட்ஷீட் ஏன் வெள்ளையாக இருக்கு? பின்னணியில் அறிவியல்! மீம்ஸ் போடுறவங்க இத தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
ரயிலில் சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிடங்களில் போகலாம்! மத்திய அரசின் செம அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved