MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Facts: ரயில் பெட்ஷீட் ஏன் வெள்ளையாக இருக்கு? பின்னணியில் அறிவியல்! மீம்ஸ் போடுறவங்க இத தெரிஞ்சுக்கோங்க!

Facts: ரயில் பெட்ஷீட் ஏன் வெள்ளையாக இருக்கு? பின்னணியில் அறிவியல்! மீம்ஸ் போடுறவங்க இத தெரிஞ்சுக்கோங்க!

Trains White Bedsheets: ரயில்களில் ஏசி பெட்டிகளில் வெள்ளை நிற பெட்ஷீட்கள் மார்ச்சுவரி போல் இருப்பதாக நீங்கள் மீம்ஸ் பாத்திருக்கலாம். ரயிலின் வெள்ளை பெட்ஷீட்களுக்கு பின்னணியில் உள்ள அறிவியல் காரணம் குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 27 2026, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரயில்களின் வெள்ளை நிற பெட்ஷீட் ரகசியம்
Image Credit : AI

ரயில்களின் வெள்ளை நிற பெட்ஷீட் ரகசியம்

இந்தியாவில் நீண்ட நேரம் களைப்பில்லாமல் சொகுசாக பயணம் செய்வதற்கு ரயில்களே மக்களுக்கு கைகொடுக்கின்றன. ரயிலின் ஏசி கோச்களில் நீங்கள் பயணம் செய்து இருப்பீர்கள். ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வெள்ளை நிறத்திலான பெட்ஷீட்கள் வழங்கப்படுகின்றன. இந்த வெள்ளை பெட்ஷீட்கள் குறித்து சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. 

அதாவது ரயிலில் வழங்கப்படும் வெள்ளை நிற பெட்ஷீட், பில்லோ கவர் மற்றும் போர்வைகளைப் பார்த்துவிட்டு, சிலர் "என்னப்பா இது... ஏசி கோச் பார்க்க ஹாஸ்பிடல் மார்ச்சுவரி மாதிரி இருக்கு" என்று கிண்டல் அடித்து கமெண்டுகளைத் தட்டி விடுகிறார்கள்.

மேலோட்டமாகப் பார்க்க இது வேடிக்கையாகத் தெரிந்தாலும், இந்திய ரயில்வே (Indian Railways) அனைத்து ரயில்களிலும் பெட்ஷீட்களுக்கு 'வெள்ளை' நிறத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் மிக வலுவான அறிவியல், சுகாதாரம் மற்றும் மேலாண்மை காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கறைகளை எளிதில் கண்டறிவதற்காக...
Image Credit : x

கறைகளை எளிதில் கண்டறிவதற்காக...

ரயில் பயணம் என்பது பல மணிநேரங்கள் நீடிக்கக்கூடியது. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் இந்த பெட்ஷீட்களைப் பயன்படுத்துகின்றனர். ரயில்வே நிர்வாகம் துணிகளைச் சரியாகத் துவைக்கிறதா இல்லையா என்பதைப் பயணிகள் பார்த்தவுடனேயே உறுதி செய்துகொள்ள இந்த வெள்ளை நிறம் உதவுகிறது. வெள்ளை துணியில் ஒரு சிறிய கறை இருந்தால் கூட அது பளிச்சென்று தெரிந்துவிடும். இதுவே வண்ணத் துணிகளாக இருந்தால் அழுக்குகளை எளிதாக மறைத்துவிட முடியும். பயணிகளுக்குச் சுத்தமான துணிகள்தான் வழங்கப்படுகின்றன என்ற நம்பிக்கையைத் தரவே இந்த ஏற்பாடு.

கிருமிகளை ஒழிக்கும் மெகா வாஷிங்

பல்வேறு மனிதர்கள் பயன்படுத்துவதால், இந்தத் துணிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க, ரயில்வேயின் நவீன இயந்திரமயமாக்கப்பட்ட லாண்ட்ரிகளில் இந்தத் துணிகள் மிக அதிக வெப்பநிலையில் (சுடுதண்ணீரில்) வைத்துத் துவைக்கப்படுகின்றன. வண்ணத் துணிகளை இப்படிச் செய்தால் அதன் நிறம் வெளுத்து, துணி பாழாகிவிடும். ஆனால், வெள்ளை துணிக்கு அந்தப் பாதிப்பு ஏற்படாது.

34
பிளீச்சிங் கெமிக்கல் பயன்பாடு
Image Credit : google

பிளீச்சிங் கெமிக்கல் பயன்பாடு

துணிகளில் இருக்கும் விடாப்பிடியான கறைகளையும், கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளையும் அழிக்க 'குளோரின் பிளீச்' போன்ற சக்திவாய்ந்த கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. வண்ணத் துணிகளில் பிளீச்சிங் செய்தால் சாயம் வெளுத்து, துணி பார்க்கவே அசிங்கமாக மாறிவிடும். வெள்ளை துணியை எவ்வளவு வேண்டுமானாலும் பிளீச் செய்யலாம்; அது மேலும் பளிச்சென்று மாறுமே தவிர, அதன் தரம் கெடாது.

நேரமும் மனித உழைப்பும் மிச்சம்

ரயில்வே துறையைப் பொறுத்தவரை தினசரி லட்சக்கணக்கான பெட்ஷீட்களைத் துவைக்க வேண்டியிருக்கும். வண்ணத் துணிகளாக இருந்தால், "சிவப்பு துணியோடு நீல துணியைப் போடக் கூடாது, சாயம் ஒட்டிவிடும்" என்று தனித்தனியாகப் பிரித்து நேரத்தைச் செலவிட வேண்டும். ஆனால், எல்லாமே வெள்ளை நிறமாக இருக்கும்போது, மொத்தமாக அள்ளி வாஷிங் மெஷினில் போட்டுவிடலாம். இது ரயில்வே ஊழியர்களின் நேரத்தையும், உழைப்பையும் பெருமளவு மிச்சப்படுத்துகிறது.

44
பயணிகளின் மனநிலை
Image Credit : Getty

பயணிகளின் மனநிலை

நிறங்களின் அறிவியல் படி, வெள்ளை நிறம் என்பது அமைதி, சுத்தம் மற்றும் நிம்மதியைக் குறிக்கும் நிறமாகும். உலகின் முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட இதனால்தான் வெள்ளை நிற பெட்ஷீட்களைப் பயன்படுத்துகிறார்கள். ரயிலில் ஏறியவுடன் தூய்மையான வெள்ளை துணிகளைப் பார்க்கும்போது, பயணிகளுக்கு மனரீதியாக ஒரு நிம்மதியும், பாதுகாப்பான உணர்வும் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி விதிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Business Idea: ரூ.20க்கு வாங்கி ரூ.40க்கு விற்கலாம்.. குறைந்த முதலீட்டில் காய்கறி கடை தொடங்குவது எப்படி?
Recommended image2
தீபாவளிக்கு கார் வாங்கப் போறீங்களா? லட்சக்கணக்கில் பணத்தைச் சேமிக்க 5 ஸ்மார்ட் டிப்ஸ்!
Recommended image3
DA Hike Update For Central Government Employees : DA உயர்வால் போக்குவரத்து படியும் அதிகரிக்குமா? யாருக்கு எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Indian Railways: ரயில் பெட்டி மேல இந்த வட்டமான மூடிகள் ஏன் இருக்கு? இதன் உண்மையான வேலை என்ன தெரியுமா?
Recommended image2
Train: ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் 7 இலவச வசதிகள்! இனி காசு கொடுத்து ஏமாறாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved