- Home
- Lifestyle
- சமைக்கும் போது எண்ணெய் முகத்தில் தெறிக்காமல் இருக்க..சூப்பர் டிப்ஸ் இருக்கு..? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க..
சமைக்கும் போது எண்ணெய் முகத்தில் தெறிக்காமல் இருக்க..சூப்பர் டிப்ஸ் இருக்கு..? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க..
Cooking Tips: Kitchen tips: சமைக்கும் போது எண்ணெய் முகத்தில் தெறிக்காமல், பாதுகாப்பாக சமையல் செய்வதற்கு மாஸ்டர் சொன்ன பெஸ்ட் டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

Kitchen tips
சமையல் அறைதான் நம் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் இடமாகும். சமைக்க தெரியாதவர்கள் கூட ஒருமுறையாவது கிச்சன் சென்று சமைத்திருப்போம். அப்படியாக, இல்லத்தரசிகளின் கோவில் என்று அழைக்கப்படும் சமையலறையில் அவசியமாகத் தேவைப்படும் சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அப்படி, தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் வீட்டின் கிச்சன் குயின் ஆகலாம்.
Kitchen tips
நாம் சமைக்கும் போது, பெரும்பாலும் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவோம். அதிலும், ஞாயிற்று கிழமை, ஏதேனும் விசேஷ நாட்கள் மற்றும் வீட்டிற்கு உறவினர்கள் வந்து விட்டால், எண்ணெயில் பொறித்த உணவுகள் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும். அப்படி சமைக்கும் போது தாளிப்பில் கறிவேப்பிலை சேர்க்கும்போது, அல்லது ஃபிரை செய்யும் போது பயந்து பயந்து அலறியிருப்போம்.
Kitchen tips
ஏனெனில், கடாயில் இருக்கும் எண்ணெய் நம் கையில் தெறித்து காயம் ஏற்பட்டு விடும் என்கின்ற பயம் இருக்கும் . எவ்வளவு தான் பாதுகாப்பாக சமைத்தாலும், நீங்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்த சமையல்காரராக இருந்தாலும் இப்படி நடப்பதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்காக நம்மால் ஃபிரை செய்யாமல் இருக்க முடியாது. இதற்கான .பிரபல செஃப் சொன்ன பெஸ்ட் டிப்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்.
Kitchen tips
நீங்கள் காய்கறி, இறைச்சி போன்ற எந்த உணவை சமைத்தாலும், முழுமையாக சமைக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். இலையென்றால், உடலில் அஜீரண கோளாறு, உள்ளிட்ட பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரசனைகளை உண்டு பண்ணும். அப்படி நீங்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளை சமைக்கும் போது, சில நேரம் மிகவும் ஆபத்தாகவும், மேலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்படலாம்.
Kitchen tips
நம்மில் பலர் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், எண்ணெயின் மேல் கையை தூக்கி மாவை எடுத்து, பின்னர் நேராக அதில் போட்டு விடுகிறார்கள், அவ்வாறு செய்வதால் எண்ணெய் தெறித்து, முகம் கைகளில் காயம் ஏற்படும். இதனால் சில நேரம் முகத்தில் கொப்புளங்கள் தோன்றி முகத்தின், அழகே கெட்டுவிடும். அடுத்து முறை, சமையல் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் கூட வராமல் போகலாம்.
Kitchen tips
இதற்கு பதில், நீங்கள் இனிமேல் மாவை எண்ணெய் பாத்திரத்தின் மையத்தில் பிடித்து, அருகில் கொண்டு வாருங்கள், பின்னர் அதை உங்களுக்கு எதிர் பக்கத்தில் மெதுவாக விடவும். இப்படி செய்வதால் எண்ணெய் உங்கள் மீது தெறிக்காது. அப்படியே கொஞ்சமாக தெறித்தாலும் அது எதிர்பக்கமாக நோக்கி சென்றுவிடும், என்று பிரபல செஃப் விளக்குகிறார்.எனவே, இந்த முறையை நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.