Father's day gift ideas தந்தையர் தினத்தில் அப்பாவை அசத்த 6 புதுமையான பரிசுகள்!
ஒவ்வொரு வருடமும் சட்டை, பெல்ட், வாட்ச் கொடுத்து போர் அடிச்சிருச்சா? இந்த தந்தையர் தினத்தில் உங்க அப்பாவுக்கு உணர்வுபூர்மாக பரிசுகள் கொடுத்து உங்களின் அன்பை வெளிப்படுத்துவதுடன், அவரது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க சில செம ஐடியாக்கள் இதோ!

டிஜிட்டல் இல்லாத ஒரு நாள்!:
போன், வாட்ஸ்அப், ஆபீஸ் டென்ஷன் எதுவுமே இல்லாத ஒரு நாள். அப்பாவுக்கு பிடிச்ச பழைய பாடல்களை ஓடவிட்டு, அவரோட உட்கார்ந்து டீ குடிச்சிட்டே சும்மா பேசுங்க. அவரோட பழைய கதைகளை கேளுங்க. இதைவிட பெரிய பரிசு எதுவுமே இல்லை!
‘ஞாபகங்கள்’ நிறைந்த போட்டோ புக் :
உங்க அப்பா சின்ன வயசுல எடுத்த போட்டோக்கள், அவரோட கல்லூரி கால நினைவுகள், நீங்க குழந்தையாக இருந்தப்போ எடுத்த போட்டோக்கள்... இதையெல்லாம் தேடிப்பிடிச்சு ஒரு ‘மெமரி புக்’ ரெடி பண்ணி கொடுங்க.
அப்பாவின் ‘ஹிடன் டேலண்ட்’ டூல் கிட் :
உங்க அப்பாவுக்கு சின்ன வயசுல படம் வரைய பிடிக்குமா? அல்லது மியூசிக், கார்டனிங், சமையலில் ஆர்வம் உண்டா? குடும்பத்துக்காக அவர் கைவிட்ட அந்த ஹாபியை மீண்டும் ஆரம்பிக்க, அதுக்கு தேவையான டூல் கிட்டை (Tool kit) இன்னைக்கே வாங்கி கொடுங்க!
ஒரு நாள் ‘கிங்’ ட்ரீட்மென்ட்:
வழக்கமாக அம்மா சமைக்கிற சாப்பாடோ, ஹோட்டல் சாப்பாடோ வேண்டாம். இந்த முறை நீங்களே கஷ்டப்பட்டு உங்க கைப்பட அப்பாவுக்கு பிடிச்ச ஸ்பெஷல் மெனுவை சமைச்சு அசத்துங்க.
‘நோஸ்டால்ஜியா’ டூர் போலாமா:
உங்க அப்பா பிறந்து வளர்ந்த கிராமத்திற்கோ அல்லது அவர் படிச்ச பள்ளி/கல்லூரிக்கோ அவரை ரகசியமா கூட்டிட்டு போங்க. அங்க இருக்கிற அவரோட பழைய நண்பர்களை பார்க்க வச்சா, அவரோட சந்தோஷத்துக்கு எல்லையே இருக்காது!
கஸ்டமைஸ்டு ‘லெட்டர்’ :
ஒரு அழகான லெட்டர் பேட்ல, பேனாவால உங்க அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதுங்க. "நீங்க என் வாழ்க்கையில பண்ணின இந்த விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும் பா..." அப்படின்னு உங்க மனசுல இருக்கிறதை கொட்டுங்க. அதை அவர் லைஃப் லாங் பத்திரமா வச்சிருப்பாரு.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

