Fathers Day 2023: ஒரு தந்தை வளர்த்தெடுத்த ஆறு குழந்தைகளில் ஒருவர் தான் டாட். அன்னைகளுக்கு நிகராக தந்தையர்களுக்கும் மரியாதை கொடுக்கப் பட வேண்டும் என டாட் நினைத்தார்.
உலகில் அன்னையர் தின வரலாறு 1860-க்களில் இருந்து துவங்குகிறது. 1914 ஆண்டு முதல் அன்னையர் தினம் தேசிய நாளாக அறிவிக்கப்பட்டது. அன்னையர்களை கொண்டாடும் வழக்கம் அப்படியே தந்தைகளை கொண்டாடவும் வழி செய்தது. இவ்வாறு 1908 ஆண்டில் இருந்து தந்தையர் தின வரலாறு துவங்குகிறது.
1907 ஆண்டு வாக்கில் மேற்கு விர்ஜினியா பகுதியில் 362 பேர் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களுக்கு மரியாதை செல்லும் வகையில் 1908 ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவே நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியாக இது பார்க்கப்பட்டது.
தந்தையர் தின கோரிக்கை:
இதற்கு அடுத்த ஆண்டு சொனாரா ஸ்மார்ட் டாட் என்பவர் தந்தையர் தினத்தை தேசிய நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்தார். ஒரு தந்தை வளர்த்தெடுத்த ஆறு குழந்தைகளில் ஒருவர் தான் டாட். அன்னைகளுக்கு நிகராக தந்தையர்களுக்கும் மரியாதை கொடுக்கப் பட வேண்டும் என டாட் நினைத்தார்.
உள்ளூர் சமுதாயம் மற்றும் அரசாங்கத்திடம் ஒரு ஆண்டு காலமாக தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என கோரி மனு கொடுத்து வந்தார். இவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வாஷிங்டன் 1910, ஜூன் 19 ஆம் தேதி முதல் முறையாக அதிகாரப்பூர்வ தந்தையர் தின கொண்டாட்டத்தை நடத்த அனுமதி வழங்கியது.

உலகின் முதல் தந்தையர் தினம்:
இதை அடுத்து பல ஆண்டுகளாக மாநிலம் கடந்து, நாடுகள் கடந்து இன்று உலகம் முழுக்க ஜூன் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில் இருந்து ஃபெடரல் விடுமுறை தினமாக அங்கீகரிக்கப்பட கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. இரு தினங்களை கொண்டாடுவதற்கு அந்த காலத்தில் பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
1920 மற்றும் 1930 ஆண்டுகளில் அன்னையர் மற்றும் தந்தையர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி தேசிய இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. இரு தினங்களை கொண்டாடுவதற்கு மாற்றாக “பெற்றோர் தினம்” கொண்டாட இந்த இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன. இவை தவிர, சில ஆண்கள் தந்தையர் தினம் கொண்டாடப்படக் கூடாது என கூறி அதே நாளை ஹால்மார்க் விடுமுறையாக பார்த்தனர்.
தந்தையர் தினம் அவசியம்:
மேலும் சிலர், தங்கள் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஒரே நபராக இருந்துள்ளனர். இவர்கள் கடின உழைப்பில் கிடைத்த பணத்தை மலர்கள் மற்றும் சாக்லேட்களில் வீணாவதை விரும்பவில்லை. தி கிரேட் டிப்ரெஷன் மற்றும் இரண்டாம் உலக போர் உள்ளிட்டவை தந்தையர் தின கொண்டாட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தன.
மன உளைச்சல் மற்றும் போர் காலக்கட்டத்தில் தந்தையர் தினம் பரிசு கொடுக்கும் விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட்டது. அதன்பின் தந்தையர் தினம் வெளிநாடுகளில் வசிக்கும் தந்தைகளை கொண்டாடும் வகையில் அனுசரிக்கப்பட்டு வந்தது. பெரும்பாலான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் தந்தையர் தினம் செயிண்ட் ஜோசப் தினம், மே 19 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பசிபிக் நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜியில் செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
