செப்டம்பர் வந்தாச்சு.. கட்டாயம் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய டாப் 5 டெஸ்டினேஷன்ஸ்!
September Destinations : பொதுவாக செப்டம்பர் மாதம் உலகின் பல பகுதிகளில் மெல்லிய பருவமழையும், சில பகுதிகளில் கோடையின் கதகதகப்பும் தோன்றும்.
Kyoto Japan
ஜப்பானின் கியோட்டோ.. ஆண்டு முழுவதும் சுற்றிபார்ப்பதற்கு ஒரு அழகான இடமது. ஆனால் செப்டம்பர் மாதம் கியோடோவை பொறுத்தவரை ஒரு சிறப்பு மாதமாகும். கோடை வெப்பம் தொடங்கும் நேரமிது, அந்த நகரில் உள்ள கோவில்கள், இயற்கை தோட்டங்கள் என்று பல இடங்களில் அமைதி நிலவும் நேரமிது. இலைகள் மெதுவாக தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் நேரத்தில் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் ஜிடாய் மட்சூரி நிகழ்வை நிச்சயம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்.
Santorini Greece
சாண்டோரினி, கிரீஸ்.. செப்டம்பரில் சாண்டோரினி நகரத்தில் அழகான வானிலையும், அதன் பின்னணியில் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளும் ஜொலிக்கும். கூட்டம் இல்லாத இடங்களை நாடுபவர்களுக்கு ஒரு சொர்க்கபுரி இதுவென்றால் அது மிகையல்ல. அங்குள்ள பழமையும், வரலாற்று சிறப்பும்மிக்க அழகிய பல கிராமங்களை சுற்றிப்பார்கள் செப்டம்பர் தான் சிறந்த மாதம்.
Cape Town South Africa
கேப் டவுன்.. தென்னாபிரிக்கா.. செப்டம்பரில் கேப் டவுனுக்கு வசந்த காலம் வருகிறது, அழகிய காட்டுப் பூக்கள் மலர்ந்து, வண்ண போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் அந்த நிலமோ கொள்ளை அழகு. அதுமட்டுமல்ல, உலகின் தலைசிறந்த திறன்தெவெளி வனவிலங்கு சரணாலயங்கள் கொண்ட இடம் தான் தென்னாபிரிக்கா. ஆகையால் வனவிலங்குகளை அதன் வாழ்விடத்திலேயே மிக அருகாமையில் பார்த்து ரசித்திட இந்த செப்டம்பர் ஒரு அருமையான நேரம்.
Munich Germany
முனிச், ஜெர்மனி.. பல உலக புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கொண்டது முனிச். அது மட்டுமல்லால், இந்த செப்டெம்பர் மாத இறுதியில் அங்கு தொடங்குவது தான் உலகின் மிகப்பெரிய பீர் திருவிழாவான Oktoberfest. செப்டம்பர் 21ம் தேதி துவங்கி, அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் வழங்கப்படும் உணவுகளையும், பீரையும் ருசிக்க உலகத்திம் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஒன்றுகூடுவார்கள்.
Provence France
புரோவென்ஸ், பிரான்ஸ்.. புரோவென்ஸின் லாவெண்டர் வயல்கள் ஜூலை மாதத்தில் பூத்துக்குலுங்கும். ஆனால் இந்த செப்டம்பர் மாதம் என்பது, தித்திப்பான திராட்சைத் தோட்டங்களை அறுவடை செய்யத்துவங்கும் மாதமாகும். Wine போன்ற மதுபிரியர்களுக்கும் ஏற்ற இடமும், நல்ல மாதமும் இது தான். மேலும் புரோவென்ஸ் அருகில் உள்ள கோர்டெஸ் மற்றும் ரூசிலன் போன்ற அழகான கிராமங்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
பட்ஜெட் சுற்றுலா போக ரெடியா? ஒன்றரை மணி நேர பயணம் தான்... எங்க தெரியுமா?