போன் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைங்க.. அதை மறக்க.. இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க..
toddler phone addiction: குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாக மாறாமல் தடுக்கும் சில டிப்ஸ்..

குழந்தைகள் வினோதமான பொருள்களை கண்டால் குதுகலமாகிவிடுவார்கள். அதனால் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பவும், அழுகையை நிறுத்தவும் பெற்றோர் மொபைல்போனை கொடுக்கின்றனர். ஆனால் நாளடைவில் மொபைல் போன் கொடுக்காவிட்டால் அவர்கள் அழத் தொடங்கிவிடுவார்கள். அதை கொடுத்தால் அழுகை நின்றுவிடும். இதை நிறுத்த குழந்தை மருத்துவ நிபுணர் சையத் முஜாஹித் ஹுசைன் சில டிப்ஸ் சொல்கிறார்.
குழந்தைகாள் டிஜிட்டல் திரைகளை பார்ப்பதால் சில உடல்நல பாதிப்புகள் ஏற்படும். பிறந்து நான்கு மாதத்தில் குழந்தைகளுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் வளர்ச்சியை பெற ஆரம்பிக்கும். அவர்களுக்கு டிஜிட்டல் திரை பார்க்கும் பழக்கம் இருந்து வந்தால் பார்வைக் குறைபாடு முதல் பல பாதிப்புகள் ஏற்படலாம்.
குழந்தைகள் சாப்பிட மொபைல் போன் கொடுத்து பழகுவது மோசமானது. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேடிக்கை காட்டி உணவு கொடுக்கலாம். மொபைல் போனை குழந்தைகள் மறக்க ஒரே வழி, அவர்களுடன் நேரம் செலவிடுவது மட்டும்தான்.
குழந்தைகள் வளரும் பருவத்தில் எண்ணங்களில் தடுமாற்றம் வரலாம். அவர்களுக்கு அனைத்தையும் அறியும் ஆவல் இருக்கும். இதனால் இளம்பருவத்தில் 'அடல்ட் வீடியோ' பார்க்கும் பழக்கம் கூட ஏற்படும். அதனால் அவர்களுடன் முறையாக உரையாடி பெற்றோர் நல்வழிபடுத்த வேண்டும். மற்ற பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஊக்குவிக்க வேண்டும்.
அப்படியே மொபைல் போனை குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள் எனில் அதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக மொபைல் போனை புடுங்கக் கூடாது. அது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கும். நட்பான முறையில் பேசி அதன் பயன்பாட்டை குறையுங்கள். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு மொபைல், லேப்டாப் பயன்படுத்த கட்டாயம் அனுமதிக்க வேண்டாம்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: அய்யன் சிவனின் அருளைப் பெற வாழ்வில் ஒருமுறையாவது இந்த விரதம் இருக்கணும்.. ஏன் தெரியுமா?
இதையும் படிங்க: நாக்கு வெள்ளையா மாறுதா? பூண்டு இப்படி பயன்படுத்துங்க.. எந்த நோயும் வராது..