வீட்டில் இருக்கும் நான் ஸ்டிக் பேனில் கீறல் விழுந்து விட்டதா? நொடியில் சரி செய்து தோசை சுட சூப்பர் டிப்ஸ்..
உங்கள் கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை கீழே தூக்கி போட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை இப்படி மாற்றி பயன்படுத்தி பாருங்கள்.
இன்றை நவீன காலகட்டத்தில், தோசை கல் , இரும்பு கல் உபயோகிக்கும் முறையெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எல்லாம், நம்முடைய வீடுகளில் நான் ஸ்டிக் கடாய் பயன்பாடு அதிகரிக்க துவங்கிவிட்டது என்றே சொல்லலாம். இரும்பு பாத்திரங்களை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும்.
ஆனால், இது போன்ற நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு உள்ளே இருக்கும் அந்த கோட்டிங் நீங்கி விட்டால், அந்த பாத்திரங்கள் எவ்வளவு புதியது போல் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தக் கூடாது. அதாவது, நான் ஸ்டிக் கோட்டிஙில் ஒரு சின்ன கீறல் விழுந்து விட்டால் கூட அந்த பாத்திரம் பயன்படுத்த முடியாமல் போகும். உடனடியாக, அதை மாற்றி விட்டு புதிய பாத்திரம் தான் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
எனவே, உங்க வீட்ல இப்படி கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளதா? அப்படி இருந்தால் இந்த குறிப்பு உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்..ஆம், இனி நீங்கள் கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை கீழே தூக்கி போட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை இப்படி மாற்றி பயன்படுத்தி பாருங்கள். உங்க வீட்ல பழைய கீறல் விழுந்த நான் ஸ்டிக் பேன், தோசை கல் எது இருந்தாலும் அதை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பேக்கிங் சோடா- 2 ஸ்பூன்
ஹார்பிக்- 2 ஸ்பூன் (டாய்லெட்டுக்கு பயன்படுத்தாத புது ஹேர் பிக்)
வினிகர் - 2 ஸ்பூன்
ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். பிறகு கிடைக்கும் இந்த லிக்விடை ஒரு நாரை வைத்து நான்ஸ்டிக் பேன் மேலே முழுவதும் தடவி விடுங்கள். 1 மணி நேரம் அந்த பேன் அந்த லிக்விடில் அப்படியே ஊறட்டும். அதன் பின்பு ஒரு ஸ்டீல் நாரை கொண்டு இந்த நான்ஸ்டிக் பேனை சுத்தமான தண்ணீரில் நன்றாக தேய்த்துக் கழுவி விடுங்கள்.
பிறகு, ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி அதனுடைய சாரை பேனில் பிழிந்து அந்த எலுமிச்சை தோலையும் அந்த தண்ணீரில் போட்டு அடுப்பை பற்ற வைத்து இந்த தண்ணீரை பேனில் நன்றாக கொதிக்க வையுங்கள்.
அதில் ஏதாவது கிருமி இருந்தால் கூட நீங்கி விடும். பிறகு, சுத்தமான தண்ணீரில் சோப்பு போட்டு நன்றாக கழுவி கொள்ளுங்கள்.. பிறகு பேனை அடுப்பில் வைத்து சூடு செய்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி புளி அல்லது வெங்காயம் போட்டு நன்றாக தேய்த்து பழக வேண்டும்.வாரம் ஒருமுறை இப்படி செய்தல் போதும், சூப்பரான மொறு மொறு தோசை சுடலாம்..