MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்க குழந்தை உடற்பயிற்சி செய்ய தயங்குதா? அப்போ 'இந்த' ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. !

உங்க குழந்தை உடற்பயிற்சி செய்ய தயங்குதா? அப்போ 'இந்த' ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. !

Kids' Fitness And Exercise : உங்கள் குழந்தை உடற்பயிற்சி செய்ய விரும்பவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை பின்பற்றினால் போதும்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 18 2025, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உங்க குழந்தை உடற்பயிற்சி செய்ய தயங்குதா? அப்போ 'இந்த' ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. !

உங்க குழந்தை உடற்பயிற்சி செய்ய தயங்குதா? அப்போ 'இந்த' ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. !

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதாகும். எனவே குழந்தைகளை மொபைல் போன் மற்றும் டிவியில் இருந்து விலகி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதிலும், மொபைல் போனில் கேம்களை விளையாடுவதிலும், டிவி பார்ப்பதிலும் தங்களை தங்களது நாட்களை கழிக்கிறார்கள். இதனால் அவர்கள் சுறுசுறுப்பாக இல்லாமல் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உடல் வலிமையாக இருக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். எனவே, உங்களது குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்கப்படுத்துங்கள். ஆனால் அது அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது. அவர்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் விருப்பத்துடன் அதில் பங்கேற்க முடியும். ஒருவேளை உங்களது குழந்தை உடற்பயிற்சி, யோகா மற்றும் விளையாட்டுகளில் இருந்து விலகி செல்ல தயங்கினால், அவர்களை அதை எவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்பதற்கான சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உடற்பயிற்சியை விளையாட்டாக ஆக்குங்கள்:

உடற்பயிற்சியை விளையாட்டாக ஆக்குங்கள்:

குழந்தைகள் விளையாடுவதை திரும்பவே விரும்புவார்கள். எனவே உடற்பயிற்சி அவர்களுக்கு ஒரு விளையாட்டாக ஆக்குங்கள். ஓடுதல், குதித்தல் போன்றவற்றை இவற்றுடன் இணைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியை ஒரு விளையாட்டாக மாற்றினால் உங்களது குழந்தைகள் நிச்சியமாக அதை மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.
 
உடற்பயிற்சி கூட்டாளி:

ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதுதான் விரும்புவார்கள். எனவே உடற்பயிற்சி ஒரு குடும்ப செயலாளராக நீங்கள் ஆக்குங்கள். உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய சொல்வதற்கு பதிலாக அவர்களுடைய நீங்களும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதாவது ஒன்றாக யோகா செய்தல், நடைப்பயிற்சி செய்தல் போன்றவை. பெற்றோர்கள் உடற்பயிற்சி செய்யும் போது குழந்தைகளும் அதை ஆர்வத்துடன் செய்ய விரும்புவார்கள். இதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையான உறவு வலுப்படும்.

35
பிடித்ததில் ஈடுபடுத்துங்கள்:

பிடித்ததில் ஈடுபடுத்துங்கள்:

உங்கள் குழந்தை விரும்பாத செயலில் அவர்களை ஒருபோதும் ஈடுபடுத்த வேண்டாம். உடற்பயிற்சி அவர்களுக்கு கடினமாக இருக்கக் கூடாது. மகிழ்ச்சியாக தான் இருக்க வேண்டும். எனவே அவர்கள் செய்ய விரும்பும் பயிற்சியில் அவர்கள் ஈடுபடுத்துங்கள். அதாவது சில குழந்தைகள் சைக்கிள் ஓட்டுதல், கேட்டரிங், தற்காப்பு கலை போன்றவற்றை விரும்பலாம். அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்ய ஊக்குவிக்கவும். அதனால் அவர்கள் எல்லா நேரத்திலும் தயங்காமல் செய்வார்கள்.

இதையும் படிங்க:  ஸ்கூலுக்கு போகும் குழந்தைக்கு இந்த '4'விதைகளை கண்டிப்பா கொடுங்க; புத்திசாலியாக வளருவாங்க!

45
சிறிய சவால்கள் மற்றும் பரிசுகள்:

சிறிய சவால்கள் மற்றும் பரிசுகள்:

குழந்தைகளுக்கு சிறிய சவால்கள் கொடுங்கள். மேலும் அதனுடன் சில பரிசுகளும் அவர்களுக்கு வழங்குகள். இது அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய மிகவும் ரசிக்க வைக்கும்.

இசை:

குழந்தைகள் விரும்பும் இசையுடன் சேர்த்து உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள். இது அவர்களை மேலும் மகிழ்ச்சியாக மாற்றும் மேலும் அவர்களது கடினமாக உணர மாட்டார்கள்.

இதையும் படிங்க:  குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு  இந்த ட்ரிங்க்ஸ் நல்லது; ஆனா இந்த '4' மட்டும் கொடுக்காதீங்க!!

55
திரை நேரத்தை அமைக்கவும்:

திரை நேரத்தை அமைக்கவும்:

குழந்தைகள் டிவி, மொபைல் போனில் அதிக நேரம் செலவிட்டால் அவர்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே கம்மி. எனவே அவர்களுக்கான திரை நேரத்தை குறைத்து வெளியே விளையாட ஊக்குவிக்கவும். சைக்கிள் ஓட்டுதல், வெளிப்புற விளையாட்டு போன்றவற்றைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். இதை நீங்கள் அவர்களது தினசரி செயலாக மாற்றினால் அவர்கள் அதை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்துக்கொள்வார்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பெற்றோர் ஆலோசனை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved