- Home
- உடல்நலம்
- குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இந்த ட்ரிங்க்ஸ் நல்லது; ஆனா இந்த '4' மட்டும் கொடுக்காதீங்க!!
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இந்த ட்ரிங்க்ஸ் நல்லது; ஆனா இந்த '4' மட்டும் கொடுக்காதீங்க!!
Parenting Tips : குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு என்ன பானங்களை கொடுக்க வேண்டும் என்ன கொடுக்கக் கூடாது என்று இங்கு பார்க்கலாம்.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இந்த ட்ரிங்க்ஸ் நல்லது; ஆனா இந்த '4' மட்டும் கொடுக்காதீங்க!!
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உணவு முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை களின் உணவில் பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். இதனால் தான் அவர்களது ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. இருப்பினும் சில சமயங்களில் பெற்றோர்கள் தெரிந்த தெரியாமலோ குழந்தைகள் கொடுக்கும் உணவின் விஷயத்தில் சில தவறுகளை செய்து விடுகிறார்கள். மேலும் குழந்தைகள் வற்புறுத்தும் போது அவர்களுக்காக சிலவற்றை வாங்கி கொடுக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் குழந்தைகள் குடிக்கும் ட்ரிங்க்ஸ் அவை குழந்தைகளுக்கு பயனளிப்பதற்கு பதிலாக அவர்களின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். எனவே என்னென்ன பானங்களை குழந்தைகள் கொடுக்கக் கூடாது.. என்ன பானங்களை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத பானங்கள்:
கூல் ட்ரிங்க்ஸ்:
இதில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். குறிப்பாக சோடாவில் இருக்கும் சர்க்கரை மற்றும் அமிலங்கள் குழந்தையின் பற்களை சேதப்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர இந்த பானங்கள் குழந்தைகளுக்கு அதிக உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இதனால் தான் குழந்தைகளுக்கு இனிப்பு சோடா கொடுக்கக் கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஆற்றல் பானங்கள்:
ஆற்றல் பானங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அமெரிக்கன் அகடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கருத்துப்படி, குழந்தைகள் மற்றும் பதின்ம வயத்தினர் ஆற்றல் பானங்களை ஒருபோதும் குடிக்க வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்துகிறார்கள். எனவே, பெற்றோர்களே உங்கள் குழந்தை இந்த பானங்களை குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
விளையாட்டு பானங்கள்:
விளையாட்டு பானங்களில் சர்க்கரை சோடியம் காஃபின் மற்றும் செயற்கை நிறங்கள் அதிகப்படியாக இருப்பதால், அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவை எடை அதிகரிப்பு, பல் சொத்தை மற்றும் இதய நோய் போன்ற பிரச்சினைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். முக்கியமாக இந்த பானம் விளையாட்டு வீரர்களுக்காக தயாரிக்கப்படுவதால் அது அவர்களுக்கு உடனடியாக ஆற்றலை வழங்கும். ஆனால் இது குழந்தைகளுக்கானது அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
டீ & காபி:
சிறுவயதில் இருந்து குழந்தைகளுக்கு டீ காபி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் காஃபின் அதிகமாக உள்ளதால், இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும் அதிகப்படியான காஃபின் குழந்தைகளுக்கு தூக்கமின்மை, தலைவலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தவிர மூலை வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பானங்கள்:
தண்ணீர்:
இது குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். தண்ணீர் குழந்தைகளின் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அவர்களது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற இது உதவும். தண்ணீர் குடிப்பதால் தேவையான அளவு ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மற்றும் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க கொடுங்கள்.
பால்:
பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதனால் தான் தினமும் ஒரு கிளாஸ் பால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பாலில் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது குழந்தைகளின் எலும்புகளை ஆரோக்கியமாக்கும். குழந்தைகளுக்கு தினமும் பால் கொடுத்து வந்தால் அவர்களது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதுதவிர மன மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இதையும் படிங்க: குழந்தைங்க ஒவ்வொரு வயதிலும் எடை, உயரம் எவ்வளவு இருக்கனும் தெரியுமா?
பழசாறு :
சர்க்கரை இல்லாத பழச்சாறு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. புதிய பழச்சாறுகளில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முக்கியமாக குழந்தைகளை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
இதையும் படிங்க: குட்டீஸ்களுக்கு ஹெல்தியான காலை உணவு.. லிஸ்ட் இதோ!