Egg Smell : முட்டை சமைச்சா வீடு முழுக்க வாடை வீசுதா? இப்படி செஞ்சா வாசனை இருக்காது
முட்டை சமைத்த பிறகு வீடு முழுவதும் துர்நாற்றம் வீசினால் நாற்றத்தை போக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
முட்டை சமைக்கும் போது வாடை அடிக்காமல் இருக்க
முட்டை என்பது கால்சியம், புரதம், இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர் புட் ஆகும். இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் காலை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். முட்டை சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் முட்டை சமைத்த நாளில் வீடு முழுவதும் அதன் வாடை அடிக்கும். அது அனைவருக்கும் பிடிப்பதில்லை. முட்டையின் மஞ்சள் பகுதியில் இருக்கும் இரும்பு, வெள்ளை பகுதியில் இருக்கும் கந்தகம் மற்றும் ஹைட்ரஜன் இவை மூன்றும் சேர்ந்து ஒரு விதமான வாசனை உருவாக்கும். அதுதான் துர்நாற்றமாக மாறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், முட்டை சமைத்த பிறகு அதன் வாடை வீடு முழுவதும் அடிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சில எளிதான குறிப்புகள் உதவியுடன் அதன் வாடையை குறைத்து விடலாம் அல்லது அகற்றி விடலாம். அது என்ன என்று பார்க்கலாம்
1. கடாயில் உப்பு :
முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிட விரும்பினால் கடாயில் எண்ணெய் தடவி சூடாக்கிய பிறகு சிறிது வெள்ளை உப்பை அதில் சேர்க்கவும். இப்போது நீங்கள் முட்டையை ஊற்றும் போது அதன் வாடை பெருமளவு குறையும்.
2. இத்தாலிய சீசனிங் :
முட்டையில் ஆம்லெட் போடும் முன், அதில் இத்தாலிய சீசனிங் சேர்க்க வேண்டும். இது முட்டையில் வாடையை அடிப்பதை அகற்றுவது மட்டுமல்லாமல், சமைக்கும் போது கடாயில் ஒரு விதமான நறுமணத்தையும் வெளியிடும். மேலும் ஆம்லெட் சுவையையும் அதிகரிக்கும்.
3. புதிய முட்டைகளை வாங்குங்கள் :
முட்டை சமைக்கும் போது வாடை அடிக்காமல் இருக்க நல்ல தரமான முட்டைகளை வாங்குங்கள். பழைய முட்டையில் வாடை அதிகமாக அடிக்கும். மேலும் அதை சமைக்கும்போது வீடு முழுவதும் துர்நாற்றம் பரவும்.
4. உப்பு மற்றும் எலுமிச்சை சாறு :
வேக வைத்த முட்டையில் வாடை அடிக்காமல் இருக்க முட்டையை வேக வைக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள் இவை இரண்டும் முட்டையின் துர்நாற்றம் நீக்கும் மற்றும் வீடு முழுவதும் நாற்றம் பரவுவதை தடுக்கும்.
மேலே சொன்ன குறிப்புகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் முட்டை சமைக்கும் போது அல்லது சமைத்து பிறகு வாடை அடிப்பதைத் தடுக்கும். நீங்களும் நிம்மதியாக சாப்பிடலாம்.